10th April 2018 14:08:12 Hours
2018ஆம் ஆண்டிற்கான இலங்கை சிங்கப் படையினரின் சிங்க மேலா எனும் இன்னிசை நிகழ்ச்சியானது கடந்த சனிக் கிழமை (07) வரக்காபொலை மைதானத்தில் பாரிய அளவிலான மக்களின் பங்களிப்போடு இடம் பெற்றது.
இதன் போது பலவாறான இன்னிசை நிகழ்சிகள் மற்றும் கேளிக்கை வினோத நிகழ்வூகள் போன்றன சிங்கப் படையணித் தலைமையகத்தின் கேர்ணல் கெமடான்ட் மற்றும் இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதியுமான மேஜர் ஜெனரல் பியல் விக்கிரமரத்தின மற்றும் சிங்கப் படையணியின் சென்டர் கெமடான்ட் பிரிகேடியர் அஜித் பல்லேவெல அவர்களின் அனுசரனையோடு சிங்கப் படையணித் தலைமையகத்தில் இடம் பெற்றது.
இந் நிகழ்வானது சம்பிரதாயபூர்வமாக சிங்கப் படையணித் தலைமையகத்தின் கேர்ணல் கெமடான்ட் மேஜர் ஜெனரல் பியல் விக்கிரமரத்தின அவர்களின் தலைமையில் கடந்த வியாழக் கிழமை (6) ஆரம்பமானது.
இந் நிகழ்விற்கான அனுசரனையை இலங்கை சிங்கப் படையணியின் நலன்புரி சேவை வழங்கியூள்ளது. அத்துடன் உணவுவகைகள் அலங்காரங்கள் மற்றும் பல வாறான செயற்பாடுகளை இப் படையினர் ஒழுங்கு செய்தனர். அதனைத் தொடர்ந்து இன்னிலை மாலை நேர இசை நிகழ்ச்சிகளும் இவ்விரு நாட்களும் இடம் பெற்றது.
இந் நிகழ்வில் பல இராணுவ உயர் அதிகாரிகள் படையினர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Nike shoes | Air Jordan Retro - 2021 Release Dates + Preview , Fitforhealth