08th April 2018 21:58:30 Hours
குருணாகல் போயகனைப் பிரதேசத்தில் அமைந்துள்ள விஜயபாகு காலாட் படையணித் தலைமையகத்தில் சிங்கள தமிழ் சித்திரைப் புத்தாண்டு நிகழ்வுகள் கடந்த சனிக் கிழமை (07) இடம் பெற்றது.
அந்த வகையில் விஜயபாகு காலாட் படையணியின் தளபதியான மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன அவர்கள் 2018ஆம் ஆண்டிற்கான சித்திரைப் புத்தாண்டு நிகழ்வில் விஜயபாகு சேவாவணிதா பிரிவின் தலைவியான திருமதி அனுஜா காரியகரவன அவர்கள் வருகை தந்ததுடன் இப் படையின் கட்டளை அதிகாரியான பிரிகேடியர் சிறிநாத் ஆரியசிங்க அவர்கள் வரவேற்றார்.
இதன் போது உயிர் நீத்த இராணுவ வீரர்களுக்கான இரு நிமிட மௌன அஞ்சலியைத் தொடர்ந்து மர நடுகை போன்ற நிகழ்வூகளும் பலவாறான விளையாட்டு நிகழ்வுகளும் இடம் பெற்றன.
மேலும் பல விளையாட்டு நிகழ்வூகளான ரபான் அடித்தல் முட்டியுடைத்தல் கயிறிழுத்தல் அழகுராணி அழகுராஜாப் போட்டி மற்றும் தலையனை அடித்தல் போன்ற நிகழ்வுகளும் இடம் பெற்றன.
இதன் போது பலவாறான புதுவருட நிகழ்வூகளும் இடம் பெற்றதுடன் பரிசில்களும் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தேநீர் விருந்துபசாரமும் இடம் பெற்றது.
மேலும் இந் நிகழ்வில் பிரதம அதிதியவர்களால் பரிசில்கள் வழங்கப்பட்டதோடு பரிசுப் பொதிகளுக்கான அனுசரனையை குருணாகல் ட்ரேட் யூனியன் வழங்கி வைத்தது
jordan release date | Air Jordan