09th April 2018 15:37:58 Hours
மாதுறுஓயாவில் அமைந்துள்ள இராணுவ பயிற்றுவிப்பு கல்லுரிக்கான முதல் விஜயத்தை இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் கடந்த ஞாயிற்றுக் கிழமை (08) மேற்கொண்டு கலந்துரையாடினார்.
இதன் போது இராணுவ அதிகாரிகள் மற்றும் படையினருடன் கலந்துரையாடிய இராணுவத் தளபதியவர்கள் அவர்களது நலன்புரி விடயங்கள் தொடர்பாக உரையாற்றியதோடு ஆணைச்சீட்டு அதிகாரிகள் மற்றும் சார்ஜன் போன்றோரிற்கான தங்குமிட கட்டடங்களைத் திறந்து வைததார்.
மேலும் இக் கல்லுhரியின் கட்டளை அதிகாரியான பிரிகேடியர் ஜயந்த செனெவிரத்ன அவர்களின் அழைப்பை ஏற்று தளபதியவர்கள் வந்ததுடன் இராணுவமானது இவ்வாறான சிறந்த நலன்புரித் திட்டங்களை மேற்கொள்கின்றது எனவேும் அவர் தெரிவித்தார்.
இவ் இராணுவ பயிற்றுவிப்பு கல்லுாரிக்கு வருகை தந்த இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களுக்கு இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டதோடு இக் கல்லுhரியின் தளபதியான பிரிகேடியர் ஜயந்த செனெவிரத்தின அவர்கள் தளபதியை வரவேற்றார்.
ஆத்துடன் தளபதியவர்கள் புதிதாக அமைக்கப்பட்ட கட்டடத்தின் ரிப்பனைக் வெட்டித் திறந்து வைத்தார்.
மேலும் புதிய கட்டத்தை திறந்து வைக்கும் நிகழ்விற்கான பால் பொங்கும் நிகழ்வும் இடம் பெற்றது.
அதனைத் தொடர்ந்து தளபதியவர்கள் புதிய கட்டடத்தை திறந்து வைத்தார்.
மேலும் இக் கல்லுhரியில் 21ஆவது பயிற்ச்சிப் பிரிவில் எதிர்பு எழுச்சி மற்றும் காட்டுப் பயிற்ச்சிகள் எனும் தலைப்பிலான பயிற்ச்சிகளை மேற்கொண்ட 12 அதிகாரிகள் மற்றும் 6 வெளிநாட்டு அதிகாரிகளுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வும் இராணுவத் தளபதியவர்ளின் தலைமயில் இடம் பெற்றது.
மேலும் இராணுவத் தளபதியவர்கள் இக் கல்லுரியில் முன்னெடுக்கப்படுகின்ற பாடநெறிகள் மற்றும் பயிற்சிகள் தொடர்பாகவும் கலந்துரையாடினார். அதனைத் தொடர்ந்து இவ் இராணுவ பயிற்றுவிப்பு கல்லுhரியின் கட்டளை அதிகாரிக்கு தமது நன்றிகளைத் தெரிவித்தார்.
இந் நிகழ்வின் இறுதிக் கட்ட அங்கத்தில் தளபதியவர்கள் படையினருடனான குழுப் புகைப்படத்திலும் கலந்து கொண்டார்.
மேலும் இப் பயிற்றுவிப்பு கல்லுாரியின் தளபதயிவர்களால் இராணுவத் தளபதிக்கு நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது.
இறுதியில் இராணுவத் தளபதியவர்கள் பிரதம அதிதியவர்களுக்கான புத்தகத்தில் தமது கருத்துக்களைக் குறிப்பிட்டதோடு அன்றய தினமே (08) மதியம் இராணுவத் தளபதியவர்கள் அவ்விடத்தை விட்டு வெளியேறினார்.
best Running shoes | Air Jordan 1 Retro High OG "UNC Patent" Obsidian/Blue Chill-White For Sale – Fitforhealth