09th April 2018 14:27:52 Hours
கௌரவமிக்க வீடமைப்பு அமைச்சரான சஜித் பிரேமதாஸ அவர்களின் தலைமையில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட வீட்டை யுத்தத்தின் போது புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் எல்ரீரீஈ பயங்கரவாதிகளின் தாக்குதலினால் இரு கண்களையும் இழந்த கஜபா படையணியின் ஸ்டாப் சார்ஜன்ட் ஜெ பி டீ ரவீந்திர அவர்களுக்கு இன்று காலை (09) அமைச்சரால் வழங்கப்பட்டது.
அந்த வகையில் கௌரவமிக்க வீடமைப்பு அமைச்சரான சஜித் பிரேமதாஸ அவர்களின் தலைமையில் அன்மையில் ஹம்பாந்தோட்டை சியநெதுகம வீடமைப்பு திட்டத்தின் மூலம் அங்கவீனமுற்ற 29 படையினருக்கு வழங்கப்பட்டதுடன் இந் நிகழ்வில் கலந்து கொண்ட ஸ்டாப் சார்ஜன்ட் ஜெ பி டீ ரவீந்திர அவர்களுக்கு கொழும்பில் புதிதாக அமையப்பெற்ற வீடும் வழங்கப்பட்டது.
அத்துடன் ஸ்டாப் சார்ஜன்ட் ஜெ பீ ஜி ரவீந்திர குமார அவர்கள் ரணவிரு சேவா விளையாட்டு கழகத்தின் பிரதித் தலைவரும் கண்பார்வையற்ற கிரிக்கெற் கழகத்தின் தலைவருமாக காணப்படுகின்றார். அன்மையில் இவர் கௌரவமிக்க வீடமைப்பு அமைச்சரான சஜித் பிரேமதாஸ அவர்களின் தலைமையில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட வீட்டை இப் படை வீரருக்கு கையளிக்கும் நிகழ்வு ரணவிரு சேவா விளையாட்டுக் கழகத்தில் இடம் பெற்றது.
மேலும் இப் படை 2009 ஆம் ஆண்டு காலப் பகுதியில் எல்ரீரீஈ பயங்கரவாதிகளினால் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் பயங்கரவாதிகளால் வீசப்பட்ட மோட்டார் குண்டுத்தாக்குதலில் தமது கண்பார்வையை முற்றாக இழந்துள்ளார்.
இந் நிகழ்வில் மீள்குடியேற்ற பணிப்பாளரான பிரிகேடியர் சாந்த திருநாவுக்கரசு இராணுவத்தின் பல உயர் அதிகாரிகள் போன்றோர் கலந்து கொண்டனர்.
affiliate tracking url | Upcoming 2021 Nike Dunk Release Dates - Iebem-morelos