09th April 2018 13:52:00 Hours
பிபிதெமு பொலன்நறுவை எனும் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இராணுவப் படையினரால் பொலன்நறுவை மீவத்புர மற்றும் சிரான குளங்களை சுத்திகரிக்கும் பணிகள் கடந்த புதன் கிழமை (4) மேற்கொள்ளப்பட்டது.
அந்த வகையில் இராணுவத் தளபதியவர்களின் 1ஃ3 பங்கிலான இராணுவத்தினர் தேசிய கட்டியெழுப்பலை நோக்காக் கொண்டு செயல்படல் வேண்டும் என்ற கருத்திற்கமைய ரஜரட நவோதய எனும் திட்டத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற பிபிதெமு பொலன்நறுவை எனும் திட்டத்தின் தளபதியாக மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க (ஓய்வு) எனும் இராணுவ அதிகாரி காணப்படுவதுடன் இவரது தலைமையில் இக் குளங்களை சுத்திகரிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டது.
அந்த வகையில் மீவத்புர மற்றும் சிரான போன்ற குளங்கள் பாரிய அளவிலான நீரைப் பாய்ச்ச வல்லதாகக் காணப்படுவதுடன் இக் குளங்களின் மூலம் அதிக அளவிலான குடும்பங்கள் பயனை அடைகின்றது.
அந்த வகையில் பாதிப்படைந்துள்ள இக் குளக்கட்டுகளைப் பற்றி இக் கிராம மக்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் முறையிட்டதன் மூலம் இராணுவத் தளபதியவர்களின் தலைமையில் படையினரின் பங்களிப்போடு இக் குளக்கட்டிற்கான மீள் சுத்திகரிப்பு பணிகள் போன்றன கடந்த புதன் கிழமை (4) மேற்கொள்ளப்பட்டது.
மேலும் இக் குளங்களானது மழை நீரைச் சேகரித்து 1000 ஏக்கர் பரப்பளவிலான வேளான்மைக்கு உதவி புரிகின்றது.
ஆந்த வகையில் ஜனாதிபதிச் செயலகத்தினால் நாட்டின் முன்னேற்றத்தை மையமாகக் கொண்டு வறிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் நோக்கில் படையினரின் ஒத்துழைப்போடு இவ் அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
அந்த வகையில் பொலன்நறுவையில் ஜனாதிபதிச் செயலகத்தின் கண்காணிப்பின் கீழ் பலவாறான கிராம அபிவிருத்தித் திட்டங்கள் கிராம சேவகர்கள் சமூர்த்தி அதிகாரிகள் நீர்ப்பாசன அதிகாரிகள் விவசாய அமைச்சின் அதிகாரிகள் போன்றோரின் பங்களிப்போடு முன்னெடுக்கப்படுகின்றது.
மேலும் ரஜரட நவோதய எனும் திட்டத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற பிபிதெமு பொலன்நறுவை எனும் திட்டத்தில் இராணுவ பொறியியலாளர்ப படையினர் மற்றும் கடற் படை விமானப் படை அதிகாரிகளால் பொலன்நறுவை மாவட்டத்தின் 7 பிரதேச செயலகங்களை உட்படுத்திய பாடசாலைகள் மத வழிபாட்டு ஸ்தலங்கள் கேட்போர் கூடங்கள் விளையாட்டு மைதானங்கள் குளங்கள் போன்றவற்றின் மீள் நிர்மானப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றது.
இந் நிகழ்வில் இத்திட்டத்தின் பணிப்பாளரான மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க (ஓய்வு) மற்றும் பல உயர் அதிகாரிகள் போன்றௌர் கலந்து கொண்டனர்.
அந்த வகையில் இவ் ரஜரட நவோதய எனும் திட்டத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற பிபிதெமு பொலன்நறுவை எனும் திட்டத்தில் பொலன்நறுவை மின்னேரி ஹிகுரங்கொடை பிரதேசத்தில் காணப்படுகின்ற மீவத்புர மற்றும் சிரான எனும் பாரிய அளவிலான குளங்களின் பணிகள் மார்ச் 02ஆம் திகதி ஜனாதிபதிச் செயலகத்தினால் முன்னெடுக்கப்பட்டதோடு 75 வீதமான மீள் நிர்மானிப்பு பணிகள் இவ்வாரம் நிறைவடையவுள்ளது.
Sportswear free shipping | Zapatillas de running Nike - Mujer