07th April 2018 06:16:15 Hours
யாழ் மரதங்கேணி பிரதேசத்தில் அமைந்துள்ள 10 (தொண்டர்) விஜயபாகு காலாட் படையணித் தலைமையத்தினரால் இலங்கை கண் தான சங்கதின் அனுசரனையோடு யாழ் பொது மக்களுக்கென இலவச கண்ணாடிகள் கடந்த வெள்ளிக் கிழமை (30) வழங்கப்பட்டது.
இந் நிகழ்வானது யாழ் பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியவர்களின் தலைமையில் ஒழுங்கு செய்யப்பட்டு இடம் பெற்றது.
அத்துடன் இந் நிகழ்விற்கான ஒழுங்குகளை 55ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான பிரிகேடியர் ஜயந்த குணரத்தின அவர்களின் தலைமையில் இலங்கை கண் தான சங்கதின் அனுசரனையோடு இடம் பெற்றது.
மரதங்கேணி பிரதேசத்தில் அமைந்துள்ள 10 (தொண்டர்) விஜயபாகு காலாட் படையணித் தலைமையத்தில் இடம் பெற்ற இந் நிகழ்வில் 600 பொது மக்கள் கலந்து கொண்டனர்.
இதில் 415 நபர்கள் இலலச மூக்குக் கண்ணாடிகளைப் பெற்றுக் கொண்டனர்.
இந் நிகழ்வில் 55ஆவது படைப் பிரிவின் கடடளை அதிகாரி இலங்கை கண் தான சங்கத்தின் தலைவர் மற்றும் இராணுவ அதிகாரிகள் படையினர் போனறோர் கலந்து கொண்டனர்.
Nike shoes | Nike - Sportswear - Nike Tracksuits, Jackets & Trainers