Header

Sri Lanka Army

Defender of the Nation

05th April 2018 22:00:49 Hours

புதிய பதவிநிலைப் பிரதானியவர்கள் மிஹிந்து செத்மெதுர இராணுவத்தினரை பார்வையிடச் சென்றார்

இராணுவ பதவிநிலைப் பிராதானியான மேஜர் ஜெனரல் தம்பத் பெணான்டோ அவர்கள் அத்திட்டியப் பிரதேசத்திலுள்ள மிஹிந்து செத்மெதுர எனும் அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களைப் பார்வையிடும் நோக்கில் பல உயர் அதிகாரிகளுடன் வியாழக் கிழமை (05) கலந்து கொண்டார்.

மேலும் இம் மையத்திற்கு வருகை தந்த பதவிநிலைப் பிரதானியவர்களை மிஹிந்து செத்மெதுரவின் தளபதியவர்கள் வரவேற்றதுடன் அதனைத் தொடர்ந்து பதவிநிலைப் பிரதானியவர்கள் உளநல மையம் மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு போன்றனவற்றைப் பார்வையிட்டார்.

ஆந்த வகையில் இம் மிஹிந்து செத்மெதுரவில் காணப்படுகின்ற படையினருடன் கலந்துரையாடிய பதவிநிலைப் பிரதானியவர்கள் அவர்களது சுக துக்கங்களை விசாரித்தார். இதன் போது இவ் அதிகாரியவர்கள் செயற்கை முறையில் செய்யப்பட்டுள்ள அங்கவீனத்தினருக்கான பொருட்களைப் பார்வையிட்டார்.

அதனைத் தொடர்ந்து மேஜர் ஜெனரல் தம்பத் பெணான்டோ அவர்கள் இவ் இல்லத்தில் காணப்படும் படைவீரர்களுக்கான உரையையும் நிகழ்த்தினார்.

இந் நிகழ்வில் மிஹிந்து செத்மெதுரவின் கட்டளை அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் போன்றோர் கலந்து கொண்டனர்.

Asics footwear | nike air max 95 obsidian university blue book list