Header

Sri Lanka Army

Defender of the Nation

05th April 2018 23:00:54 Hours

பொதுநலவாய (கொமன்வெல்த்) பளுதுாக்கும் விளையாட்டு போட்டியில் கோப்ரல் லக்மால் வெற்றி

21ஆவது பொதுநலவாய (கொமன்வெல்த்) ஆண்களுக்கான பளுதுாக்கும் இறுதி போட்டியானது (05)ஆம் திகதி வியாழக் கிழமை அவுஸ்ரேலியா கோல்ட் கோஸ்ட் நகரில் இடம் பெற்றது. ஆண்களுக்கான 56 கிலோ பளுதுாக்கும் போட்டியில் இலங்கை இராணுவ விழையாட்டு கழகத்தின் 4ஆவது கொமாண்டோ படையணியின் கோப்ரல் ஜே.ஏ.சி லக்மால் வெற்றிப் பெற்றார்.

அந்த வகையில் இலங்கை இராணுவ விளையாட்டு கழகத்தை பிரதிநிதிதுவப்படுத்தி கலந்து கொண்ட கோப்ரல் ஜே.ஏ.சி லக்மால் அவர்கள் ஆண்களுக்கான 56 கிலோ பளுதுாக்கும் போட்டியில் மொத்தமாக 248 கிலோ பளுதுாக்கும் வென்னகலப் பதக்கத்தை பெற்றுக் கொண்டார்.

இலங்கை இராணுவ விழையாட்டு கழகத்தில் கோப்ரல் ஜே.ஏ.சி லக்மால் 114 கிலோ மற்றும் 134 கிலோ பளுதுாக்கி திறமையை வெளிகாட்டியுள்ளார்.

இப் பொதுநலவாய போட்டிகளில் கோப்ரல் ஜே.ஏ.சி லக்மால் 11- ஆவது சிறந்த பளுதூக்கும் போட்டியாளராக காணப்படுவதுடன் இப் போட்டிகளில் 07 ஆண்கள் மற்றும் 04 மகளிர் பங்குபற்றினர்.

71 நாடுகளை பிரதிநிதிதுவப்படுத்தி 6600க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டதுடன் 2018ஆ; ஆண்டு ஏப்ரல் 4ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இவ் 11 நாள் விளையாட்டு மற்றும் கலை நிகழ்வுகளும் இடம் பெறும்.

18 விளையாட்டு கழகங்களை பிரதிநிதிதுவப்படுத்தி 15 ,000 நபர்கள் கலந்து கொண்டதுடன் 7 பரா விளையாட்டுக்களும் இடம் பெற்றது.

latest Running Sneakers | nike air max 95 obsidian university blue book list