05th April 2018 14:18:55 Hours
கொழும்பு எஸ் எஸ் சி மைதானத்தில் இன்று காலை (04) இடம் பெற்ற கொழும்பு பாதுகாப்பு கல்லுாரிமற்றும் ஹேமாகமை ராஜபக்ஷ வித்தியாலயம் போன்றவற்றிற் கிடையில் இடம் பெற்ற கிரிக்கெட் இறுதிச் சுற்றுப் போட்டிகளில் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் கலந்து கொண்டார்.
இவ்வொரு நாள் சுற்றுப் போட்டியில் பங்கேற்க கல்லுாரிகளில் பாதுகாப்பு கல்லுாரியானது கல்வித் திணைக்களத்தில் சர்வதேச பாடசாலையாகக் காணப்படுகின்றது. அந்த வகையில் இக் கல்லுhரியானது முப் படைகளில் சேவை செய்கின்ற படையினரது பிள்ளைகளுக்கு கல்வியை வழங்குகின்ற பாடசாலையாகக் காணப்படுகின்றது.
இந் நிகழ்விற்கு வருகை தந்த இராணுவத் தளபதியவர்களை இவ்விரு கல்லுாரிகளினதும் அதிபர்கள் வரவேற்றதோடு இவ்விரு கிறிக்கெற் குழுவினரையும் சந்தித்து தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து உரையாற்றினார்.
இந் நிகழ்விற்கு பாதுகாப்பு கல்லுhரியின் மேஜர் ஜெனரல் சுணில் வன்னியாராச்சி (ஓய்வு) மற்றும் கல்வித் திணைக்களத்தின் அதிகாரிகள் போன்றோர் கலந்து கொண்டனர்.
Authentic Nike Sneakers | Nike Air Force 1 , Sneakers , Ietp STORE