02nd April 2018 18:40:45 Hours
மட்டக்களப்பில் அமைந்துள்ள 23 ஆவது படைப் பிரிவிற்கு கீழ் இயங்கும் 231 ஆவது படைத் தலைமையகத்தின் முழுமையான ஒத்துழைப்புடன் காலஞ் சென்ற ஓய்வு பெற்ற பொலிஸ் மகளீர் உத்தியோகத்தரான உப பொலிஸ் பரிசோதகரான திருமதி கிருபராணி ஜோகராஜா (வயது 59) அவர்களின் மரணச் சடங்குகள் (26) ஆம் திகதி திங்கட் கிழமை மட்டக்களப்பில் இடம் பெற்றன.
இவ் உத்தியோகத்தர் 1979 ஆம் ஆண்டு 3 ஆம் திகதி கிழக்கு மாகாணத்தில் இருந்து இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு இணைந்த முதலாவது உத்தியோகத்தர் ஆவார். பின்பு 2002 ஆம் ஆண்டு உப பொலிஸ் பரிசோதகர் பதவிக்கு தரம் உயர்த்தப்பட்டார்.
இவர் 39 வருட சேவை பூர்த்தியின் பின்பு 2018 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 16 ஆம் திகதி பொலிஸ் திணைக்களத்திலிருந்து ஓய்வூதியம் பெறவுள்ளார்.
காலஞ் சென்ற உப பொலிஸ் பரிசோதகரான திருமதி கிருபராணி ஜோகராஜா அவர்கள் பொலிஸ் அதிகாரியை திருமணம் முடித்திருந்தார். இவர் தற்பொழுது பொலிஸ் திணைக்களத்திலிருந்து ஓய்வூதியம் பெற்றுள்ளார். இவருக்கு இருபத்தியாறு வயதை உடைய ஜானகி எனும் மகளும், 23 வயதையுடைய ஜயபாலன் எனும் மகனும் உள்ளனர். இவருடைய மகள் இலங்கை இராணுவ ஊடக பணியகத்தில் எழுதுவினைஞர் மற்றம் கனனி இயக்குனராக கடமையாற்றுகின்றார்.
இவர் தீடிரென நோயுற்று மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதித்ததன் பின்பு இவருக்கு சிறுநீரக நோய் இருப்பதாக வைத்திய பரீசீலனையின் மூலம் ஊர்ஜிதமாயுள்ளது.
பின்பு இவரது மகளான லான்ஸ் கோப்ரல் ஜானகி ஜோகராஜா தனது தாயாரை மேலதிக சிகிச்சைக்காக கொழும்பில் அமைந்துள்ள இராணுவ வைத்தியசாலைக்கு அனுமதித்தார். இருந்த போதிலும் இவருக்கு அளித்த சிகிச்சை பயணின்றி 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24 ஆம் திகதி இராணுவ வைத்தியசாலையில் காலமானார்.
இராணுவ ஊடக பணிப்பாளர் பிரிகேடியர் சுமித் அதபத்து அவர்களது பணிப்புரையின் கீழ் 231 ஆவது படைத் தலைமையகத்தின் முழுமையான ஒத்துழைப்புடன் மட்டக்களப்பு கள்ளியன்காடு கிறிஸ்தவ மையானத்தில் பொலிஸ் அணிவகுப்பு மரியாதையுடன் குடும்பத்தார் மற்றும் பொலிஸ் குடும்ப அங்கத்தவர்களது பங்களிப்புடன் இவரது பூதவுடல் அடக்கம் செய்யப்பட்டது.
இலங்கை இராணுவ மகளிர் படையணி மற்றும் 3 ஆவது மகளிர் படையணியைச் சேர்ந்த படை வீராங்கனைகள் இந்த மரணச் சடங்குகளில் கலந்து கொண்டு அவர்களது சோகங்களை வெளிக்காட்டினர்.
231 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதியான பிரிகேடியர் செனரத் நியுன்ஹெல்ல அவர்களது பணிப்புரையின் கீழ் இந்த மரண சடங்கு வீட்டிற்கு தகட்டு கூறைகள் மற்றும் மரணச் சடங்கிற்கு தேவையான உதவிகள் மார்ச் மாதம் 24 ஆம் திகதி தொடக்கம் 26 ஆம் திகதி வரை வழங்கப்பட்டது.
இந்த மரணச் சடங்கின் இறுதிக் கிரிகைகளில் கிறிஸ்தவ மதகுருமார்கள் , மதிப்புக்குரிய சீனித்தம்பி ஜோகேஸ்வரன், மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் , எம்.டீ.கே.எப் ஜயசேகர, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் , 231 ஆவது படைத் தளபதி, இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள், இராணுவ மகளிர் படை வீராங்கனைகள் மற்றும் குடும்ப அங்கத்தவர்கள், உறவினர்கள் போன்றோர்கலந்து கொண்டனர்.
latest jordans | Nike Off-White