31st March 2018 14:18:11 Hours
யாழ் குடாநாட்டில் சேவை புரியும் முப்படையினரது திறமைகளை வெ ளிப்படுத்தும் முகமாக ‘Jaffna Got Talents’ மூலமாக பாடல் மற்றும் நடன இறுதிப் போட்டிகள் (29) ஆம் திகதி வியாழக் கிழமை முப்படையினரைச் சேர்ந்த 6000 பேரது பங்களிப்புடன் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றன.
இந்த போட்டிகள் இரு பிரிவுகளுக்கு இடையில் இடம்பெற்றன. இறுதிப் சுற்றுப் போட்டியின் ஆறு பேரின் இடையே நடன பிரிவில் வெற்றியை 7 ஆவது மகளீர் படையணியைச் சேர்ந்த லெப்டினன்ட் சீ.டீ ஜோசப் சுவீகரித்துக் கொண்டார்.
பாடல் போட்டிகளில் முதலாவது இடத்தை 4 ஆவது இயந்திர பொறியியலாளர் படையணியின் போர் வீரன் எச்.ஏ.பி.எம்.எம். ஹெட்டியாரச்சி அவர்கள் பெற்றுக்கொண்டார்.
இந்த இறுதிச் சுற்றுப் போட்டியில் விசாரத சமந்த பெரேரா, விசாரத நிஹால் கம்ஹேவா, சிறந்த பாடகர் அந்தனி சுரேந்திர, நடிகை மீனா குமாரி, நடிகர் ஹேமால் ரணசிங்க, சினிமா நடிகர் தேவிந்த கோன்கஹகே, சிறந்த நடிகை ஸ்வினீதா வீரசிங்க, சிறந்த நடிகர் கமல் அத்தராரச்சி, சிறந்த அறிவிப்பாளர் சுபுத்தி லக்மாலி மற்றும் நடுவர் மடுல்லே அவர்களது கண்காணிப்பின் கீழ் இடம்பெற்றன.
யாழ்ப்பாணத்தில் முதல் தடைவையாக இந்த நிகழ்வு இடம்பெற்றன. இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் வருகை தந்தார். மேலும் யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி மற்றும் முப்படையைச் சேர்ந்த சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
முப்படையினரது பங்களிப்புடன் இந்த இசை நிகழ்ச்சி சிறப்பாக இடம்பெற்றன.
இப் போட்டிகளில் ‘ நடன பிரிவில் முதலாவது இடத்தை 7 ஆவது மகளீர் படையணியைச் சேர்ந்த லெப்டினன்ட் சீ.டி ஜோசப் மற்றும் பாடல் பிரிவில் முதலாவது இடத்தை பிடித்த 4 ஆவது மின்சார பொறியியலாளர் படையணியைச் சேர்ந்த போர் வீரன் எச்.ஏ.பி.எம்.எம் ஹெட்டியாரச்சி அவர்களுக்கு 100,000/= ரூபாய் நிதி பரிசும், போட்டியில் இரண்டாவது இடத்தை பெற்றவர்களுக்கு 50,000/= ரூபாய் மற்றும் 25,000/= ரூபாய் வழங்கப்பட்டுள்ளன.
இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு இராணுவ தளபதி லெப்டின ன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக மற்றும் யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்கள் பரிசினை வழங்கி வைத்தனர்.
jordan release date | Nike Off-White