Header

Sri Lanka Army

Defender of the Nation

31st March 2018 14:19:08 Hours

அநுராதபுரத்தில் இராணுவ தளபதிக்கு ஆசிர்வாதம்

யாழ்ப்பாணத்திற்கு விஜயத்தை மேற்கொண்டு பயணிக்கையில் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் (30) ஆம் திகதி சனிக் கிழமை அநுராதபுரையில் அமைந்துள்ள ஶ்ரீ மஹா போதின் வஹன்சேவை வணங்கி ஶ்ரீ மஹா போதின்கே ஆசிர்வாதத்தையும் பெற்றுக்கொண்டார்.

இங்கு இராணுவ தளபதி ஜய ஶ்ரீ மஹா போதி வஹன்சே, மிரிசவெடிய மற்றும் ருவன்வெலி சேய வந்தனாவின் விகாராதிபதியான அடமஸ்தானாதிபதி அதி பூஜய பல்லேகம சிறிநிவாசாபிதான நாயக தேரர் அவர்களையும் சந்தித்து ஆசிர்வாத பூஜையிலும் இணைந்து கொண்டனர்.

இச் சந்தர்ப்பத்தில் வன்னி பாதுகாப்பு படைத் தளபதி குமுது பெரேரா உட்பட சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் இணைந்து கொண்டனர்.

அத்துடன் இராணுவ தளபதி மிரிஸவெடிய மற்றும் ருவன்வெலிசேய வெந்தபுதா விகாராதிபதி பூஜய அத்தாவெடுனுவ்வெவ குணரத்ன சுவாமின் தேரர் அவர்களையும் சந்தித்து ஆசிர்வாதத்தையும் பெற்றுக்கொண்டார்.

இச் சந்தர்ப்பத்தில் 21 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் த சில்வா மற்றும் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

buy shoes | Sneakers