Header

Sri Lanka Army

Defender of the Nation

29th March 2018 23:58:22 Hours

காணாமல் போனவர்களை தேடி மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் நடவடிக்கை

கண்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கந்தான கந்துவிடிய காட்டுப் பிரதேசத்திற்கு சுற்றுலாவை மேற்கொண்ட பல்கலைக்கழக மாணவர்கள், மாணவிகள் இப் பிரதேசத்திற்கு சென்றபோது காணாமல் போயுள்ளனர். இவர்களை மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகம் மற்றும் 11 ஆவது படைப் பிரிவிற்கு கீழ் இயங்கும் 2ஆவது (தொண்டர்) சிங்கப் படையணியின் ஒரு அதிகாரி உட்பட் 8 படை வீரர்களது பங்களிப்புடன் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டு இந்த மாணவர்கள், மாணவிகள் (29) ஆம் திகதி வியாழக் கிழமை கண்டு பிடிக்கப்பட்டு மீட்கப்பட்டனர்.

கிடைத் தகவலுக்கமைய பட்டப்படிப்புகளை மேற்கொள்ளும் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 9 மாணவர்களும், 8 மாணவிகளும் காணப்பட்ட பணி நிமித்தம் காணப்பட்ட இருள் சீரற்ற காலநிலை நிமித்தம் இப் பிரதேசத்தில் சுற்றுலாவை மேற்கொள்ளும் சமயத்தில் பாதை தவறி சென்று மீண்டும் வரமுடியாத நிலையில் இவர்கள் இருந்தனர்.

கண்டி மாவட்ட செயலாளரினால் மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருக்மள் டயஸ் அவர்களுக்கு விடத்து வேண்டுகோளுக்கமைய படைத் தளபதியின் பணிப்புரைக்கமைய 11 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் நிஷ்சங்க ரணவன அவர்களது தலைமையில் 16 இராணுவத்தினரது பங்களிப்புடன் இந்த தேடுதல் நடவடிக்கை ஆரம்பமாகி இந்த மாணவ மாணவிகள் கண்டு பிடிக்கப்பட்டன.

இந்த தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்ட படையினர் (29) ஆம் திகதி (1130) மணியாகும்போது இந்த மாணவ மாணவிகளை கண்டு பிடித்தனர். பின்பு இந்த மாணவ மாணவிகள் 2ஆவது சிங்கப் படையணியின் படை வீரர்களால் இரவு 10.30 மணிக்கு கண்டி பொலிஸ் நிலையத்திற்கு பாரமளிக்கப்பட்டனர்.

short url link | Jordan Shoes Sale UK