Header

Sri Lanka Army

Defender of the Nation

29th March 2018 20:40:06 Hours

இராணுவ தளபதி யாழ் மாவட்ட பேராயரை சந்திப்பு

யாழ் குடா நாட்டிற்கு விஜயத்தை மேற்கொண்ட இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் யாழ் மாவட்டத்திற்கான பேராயரான அருட் தந்தை ஜஸ்டின் பெர்னாட் ஞானபிரகாஷம் அவர்களை அவரது பணிமனையில் (29) ஆம் திகதி வியாழக் கிழமை பகல் சந்தித்தார்.

இச் சந்திப்பின்போது பெரிய வெள்ளி தொடர்பான விபரங்களையும் முன்னாள் போராளிகளின் புனரமைப்பு, ஐந்து வருட காணி வெளியீட்டுக் கொள்கையின்படி மேலும் மேலும் சிவில் நிலங்களை விடுவித்தல் மற்றும் அனைத்து இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை மேலும் பலப்படுத்துதல், மற்றும் சம்பந்தப்பட்ட விடயங்கள் தொடர்பான கருத்துக்களை இராணுவ தளபதி வெளியிட்டார்.

இச் சந்திப்பின்போது 51 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரொஷான் செனெவிரத்ன அவர்களும் இணைந்திருந்தார்.

Nike shoes | nike air jordan lebron 11 blue eyes black people