26th March 2018 14:13:43 Hours
விஜயபாகு காலாட் படைத் தலைமையகத்தின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன அவர்களின் அழைப்பை ஏற்று இரண்டாவது தடவையாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க அவர்கள் (24) ஆம் திகதி குருநாக்கல் போயகனேயில் அமைந்துள்ள இராணுவ விஜயபாகு காலாட் படைத் தலைமையகத்துக்கு விஜயத்தை மேற்கொண்டார்.
இலங்கை இராணுவத்தில் இடம் பெற்ற யுத்தத்தின் பின் சிறந்த அங்கிகாரம் மற்றும் புகழையும் பெற்றுள்ள இப் படைத் தலைமையகத்தின் விஜயபாகு காலாட் படையினரால் பாராட்டு மரியாதைகளுடன் இராணுவ தளபதி வரவேற்றகப்பட்டார்.
இராணுவ விஜயபாகு காலாட் படைத் தலைமையகத்தின் நுலைவாயில் இராணுவ தளபதிக்கு இராணுவ மரியாதை வழங்கப்பட்டதை தொடர்ந்து இப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன மற்றும் கட்டளை தளபதி பரிகேடியர் ஸ்ரீ நாத் ஆரியசிங்க அவர்களால் இராணுவ தளபதி வரவேற்கப்பட்டதை தொடர்ந்து யுத்தத்தின் போது உயிர் நீத்த இராணுவ வீரர்களின் நினைவிடம் மற்றும் பரம விபுஷண நினைவாக அமைக்கப்பட்ட சிலைகள் ஆகியவற்றிற்கு மரியாதை செலுத்தினார் அதனைத் தொடர்ந்து படையினரால் இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
ஆதனைத் தொடர்ந்து இராணுவ தளபதி மற்றும் விஜயபாகு காலாட் படைத் தலைமையகத்தின் தளபதியும் இப் படைப் தலைமையக வளாகத்தை பார்வையிட்ட பின் சிரேஷ்ட அதிகாரிகள் படையினர்களுடம் குழு புகைப்படத்திலும் கலந்த கொண்ட அவர் இப்படைத் தலைமையக வளாகத்தில் மரக் கன்று நடும் நிகழ்விலும் கலந்து கொண்டார்.
அதற்கமைவாக புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இராணுவ விடுதி இராணுவ தளபதியால் திறந்து வைக்கப்பட்டது.
இதே சந்தர்ப்பத்தில் விஜயபாகு காலாட் படையணியின் விளையாட்டு கழகத்தின் அதிகாரிகள் மற்றும் படையினருடன் இணைந்து இராணுவ தளபதி உறையாற்றுகையில் நாடுடெங்கிளும் நல்ல பணிகளை செய்துள்ளது இராணுவத்தில் ஒழுக்க முறையில் பணியாற்றுதல் பற்றியும் இராணுவ சம்பந்த மான பல கருத்துக்களையும் தெரிவித்தார்.
இராணுவ தளபதியின் விஜயத்தின் நினைவாக விஜயபாகு காலாட் படையணியின் தளபதியான மேஜர் ஜெனரல் அஜித் காரியகாரவன இராணுவத்தின் தளபதிக்கு ஒரு நினைவுச்சின்னத்தை வழங்கினார். பின்னர் அதன் பின் உத்தியோகபூர்வ விருந்தினர் புத்தகத்தில் கையெப்பம்மிட்டார்.
அதன் பின் மதிய உணவு விரிந்துபசாரமும் இடம்பெற்றது.
1990 ஆம் அண்டு மார்ச் 22 ஆம் திகதி புத்தளம்,சிங்கவிலுவன்ன பிதேசத்தில் அமைக்கப்பட்ட விஜயபாகு காலாட் படைத் தலமையகம்1993 ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி பதட்டமான நகர்ப்புற சூழல் காரணமாக தென்னை பயிர்செய்கை காரணமாக தொடர்ந்து குருநாகல் போயகனே பிரதேசத்தில் இப் படைத் தலைமையகம் அமைக்கப்பட்டது. இப் படைத் தலைமையகத்தின் 28 ஆண்டு நிறைவை கடந்த தினங்களில் கொண்டாடப்பட்டனர்.
விஜயபாகு காலாட்படையணியில் யுத்த்த்தின் போது 650 அதிகாரிகள், 16,000 படையினர் பாதுகாக்கப்பட்டனர் மற்றும் வழக்கமான மற்றும் தன்னார்வத் துருப்புக்கள் போர்க்களத்தில் மற்றும் பிற துறைகளில் பல்வேறு வெற்றிகளைப் பெற்றனர்.
Authentic Nike Sneakers | Jordan 1 Mid Tropical Twist , Where To Buy , 554724-132 , Nike Air Max 96 green Men Running Shoes