Header

Sri Lanka Army

Defender of the Nation

25th March 2018 11:49:27 Hours

2ஆவது வருடாந்த மருத்துவ சேவை நிகழ்வுகள் ஆரம்பம்

இலங்கை இராணுவ மருத்துவ கல்லுாரியின் இரண்டாவது ஆண்டு ஆரம்ப நிகழ்வுகள் 2018 மார்ச் 23ஆம் திகதி கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் ஆரம்பிக்கப்பட்டது இலங்கை இராணுவ மருத்துவ கல்லுாரியின் (SLCOMM) அதிகாரியான மேஜர் ஜெனரல் சஞ்ஞீவ முனசிங்க அவர்களின் அழைப்பையேற்று பிரதான அதிதியாக ஜனாதிபதி செயலாளர் ஒஸ்டின் பெணாந்து மற்றும் பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரத்ன மற்றும் பாதுகாப்பு நிறைவேற்று அதிகாரி அத்மிரால் ரவிந்ர சி விஜேகுனரத்ன மற்றும் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக மற்றும் விமானப்படைத் தளபதி வைஸ் அத்மிரால் சிரிமவன் ரனசிங்க அவர்களும் கலந்த கொண்டனர்.

மேலும் இந் நிகழ்வில் ஆரம்ப உரை இராணுவ மருத்துவ சங்கத்தின் தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் பி புரி விஎஸ்எம் பிஎச்எஸ் அவர்களின் தலைமையில் இடம் பெற்றதுடன் இந்தியா,பாகிஸ்தான்,நேபாலம் பங்களதேஸ்,ஓமான் போன்ற ஐக்கிய நாட்டு பிரதிநிதிகள் இவ் விரிவுரையில் கலந்து கெண்டார்கள்.

இராணுவ சம்பிரதாய வழக்கப்படி மங்கள விளக்கேற்றல் நிகழ்வு இடம்பெற்றது.அதனைத் தொடர்ந்து இராணுவ மருத்துவ கல்லுாரியின் (SLCOMM) அதிகாரியான மேஜர் ஜெனரல் சஞ்ஞீவ முனசிங்க அவர்களால் வரவேற்புரை வழங்கப்பட்தை தொடர்ந்து களனி பல்கலைகழக மருத்துவ பீடத்தின் பேராசிரியரும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் முதுகலை கல்வி பேராசிரியரான பேராசிரியர் ஜானக டி சில்வா அவர்களின் ஆரம்ப விரிவுரையும் இடம்பெற்றது.

மூன்று நாள் (23-25) விரிவுரையில் பலவகையான வெப்பம் சம்பந்த நோய்கள் மற்றும் இராணுவ மருந்து' 'முகம் அழகியல் மற்றும் விரிவான அணுகுமுறை' 'விமான மருத்துவம், மற்றும் நீருக்கடியில் சூழலில் ஆபத்துகள் போன்ற தலைப்பில் விரிவுரைகள் வழங்கப்பட்டது.

அந்த வகையில் பலவாறான கருத்தரங்குகள் மார்பக புற்றுநோயின் தற்போதைய மேலாண்மை 'பெண்னியல் நோய்கள் எதிர் கொள்ளும் மருத்துவ சவால்கள் 'யுத்த காலத்தின் போது வழங்கும் அறுவை சிகிச்சை வகைள்' 'ரோபோடிக் அறுவை சிகிச்சை', பேரழிவில் இறந்தவர்களின் முகாமைத்துவம் போன்ற விடயங்கள் தொடர்பாக இடம் பெற்றது.

அந்த வகையில் தலைமைத்துவம் போன்ற விடயங்கள் தொடர்பாக சமூக ஆர்வலர் அதிகாரியான மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்க அவர்களால் ஆறு கருத்தரங்குகள் அத்துடன் மருத்துவ நடமாடும் சேவைகள் போன்றன முல்லைத்தீவுப் பிரதேசத்தில் சிறுநீர் நோய்க்குள்ளானவர்களுக்கு 1200 பொதுமக்களின் பங்களிப்போடு இச் சேவை இடம் பெற்றது.

அந்த வகையில் 400 முப் படை அதிகாரிகளைக் கொண்டு கொழும்பு இராணுவத் தலைமையகத்தில் 2016 மார்ச் மாதம் 18ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

அந்த வகையில் சர்வதேச ரீதியில் அங்கிகாரம் பெற்ற இலங்கை இராணுவ மருத்துவ கல்லுாரியின் 120 வெளிநாடுகளில் உள்ள பிரபலங்களின் பங்கேற்புடன் சில ஆண்டுகளிற்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டது.

இதன் போது பலவாறான மருத்துவ வில்லைகள் மற்றும் சூழலிற்கு உகந்த பாதுகாப்பை அளிக்கக் கூடிய மருந்து வகைகள் தொடர்பான கலந்துரையாடலும் இடம் பெற்றது.

மேலும் உயர் தரப் பட்டப்படிப்புகள் போன்றன இராணுவ அதிகாரிகளுக்காக கொழும்பு பல்கலைக் கழகத்தில் நடைபெறுகின்றன.

Sportswear free shipping | Nike Shoes