Header

Sri Lanka Army

Defender of the Nation

22nd March 2018 14:15:15 Hours

வன்னி மற்றும் கிளிநொச்சி படையினருக்கு சைபர் குற்றம் மற்றும் சமூக வலைத்தளங்கள் தொடர்பான விரிவுரை

இராணுவ தளபதி அவர்களின் எண்ணக் கருவிற்கமைய சைபர் குற்றம் மற்றும் சமூக வலைத்தளங்களின் தாக்கம் தொடர்பான விரிவுரை கடந்த (19)ஆம் திகதி திங்கட் கிழமை வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக வளாகத்தில் இடம் பெற்றது.

இந்த விரிவுரையானது தகவல் தொழிநுட்ப பணியகத்தின் தகவல் தொழில் நுட்ப அதிகாரி கேர்ணல் நலின் ஜயரத்ன அவர்களினால் இந்த விரிவுரைகள் ஆற்றப்பட்டன. இந்த விரிவுரை நிகழ்வில் 700க்கும் அதிகமான அதிகாரிகள் மற்றும் படையினர் பங்கேற்றனர்.

இவ் விரிவுரையில் முகநூல் (Face Book), வயிபர் (Viber), வட்ஸ்அப் (Whats App) போன்ற வளைத்தளங்கலை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி என்பது தொடர்பாக விரிவுரைக்கப்பட்டது.

முக்கிய விளம்பரங்கள், முக்கிய தகவல்கள் பாதுகாப்பான பதிவேற்றங்கள் (uploading) மற்றும் தேவையற்ற பதிவுகளினால் ஏற்படும் தீமைகள் பற்றியும் விரிவுரைக்கப்பட்டது. இராணுவத்தினர் சமூக வலைத்தளங்கள் மூலம் தகவல்களை பரிமாற்றம் செய்யும்போது இராணுவம் மற்றும் சிவில் நீதிரீதிகளுக்கு கீழ்படிவது அவசியம் என்று வலியுறுத்தப்பட்டது. இந்த விரிவுரைகள் வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்களின் வழிகாட்டலின் கீழ் இடம்பெற்றது.

மேலும், கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன அவர்களின் வழிகாட்டலின் கீழ் படைத் தலைமையகத்தில் அமைந்துள்ள நெலும் பியச கேட்போர் கூடத்தில் (20) ஆம் திகதி செவ்வாய் கிழமை இடம் பெற்றது. இந்த விரிவுரையில் 900க்கும் அதிகமான அதிகாரிகள் மற்றும் படையினர் கலந்து கொண்டனர்.

Running Sneakers | Nike