21st March 2018 10:16:09 Hours
கஜபா படையணியில் விளையாட்டு துறைகளில் உள் மட்டம் மற்றும் தேசிய ரீதியிலான போட்டிகளில் தமது திறமைகளை வெளிக்காட்டிய வீரர்களை கௌரவப் படுத்தும் கஜபா வர்ண இரவு நிகழ்வு (20) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை கொழும்பு பிஷப் கல்லூரி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றன.
இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராணுவ தளபதி, லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களும், அதிதியாக உலக புகழ்பெற்ற கிரிக்கெட் வீரரான மகேல ஜயவர்தன அவர்களும் வருகை தந்தனர்.
இவர்களை கஜபா படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திரா சில்வா அவர்கள் வரவேற்று பிரதம விருந்தினர் , அதிதிகள் மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகளின் பங்களிப்புடன் மங்கள விளக்கேற்றும் நிகழ்வு இடம்பெற்றன.
அதனை தொடர்ந்து நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த படை வீரர்களை நினைவு படுத்தி இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்பு கஜபா படையணியின் படைத் தளபதியினால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது.
35 ஆவது கஜபா படையணியின் நினைவு நூல் கஜபா படையணியின் வளர்ப்பாளார் மேஜர் ஜெனரல் விஜய விமலரத்ன அவர்களது பாரியாரான திருமதி மானேல் விமலரத்ன அவர்களினால் வெளியிடப்பட்டன.
இந்த நிகழ்வில் கஜபா படையணின் சாதனைகளை நிலை நாட்டிய வீராங்கனைகளது புகைப் படங்கள் கானோலி மூலம் திரையிட்டு காண்பிக்கப்பட்டது. கஜபா படையணியில் விளையாட்டு துறைகளில் சர்வதேசம் மற்றும் உள் நாட்டு விளையாட்டுகளில் பங்கு பற்றி திறமைகளை வெளிக்காட்டிய இராணுவ அதிகாரிகள் மற்றும் படை வீரர்கள் உள்ளடக்கப்பட்ட 101 பேருக்கு இந்த கஜபா வர்ண இரவு நிகழ்வில் விருதுகள் வழங்கப்பட்டன.
2012, 2013, 2015, , 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில், விளையாட்டு துறைகளில் இராணுவ ரீதியிலும் தேசிய ரீதியிலும் திறமைகளை வெளிக்காட்டிய வீரர்களுக்கு இந்த பரிசளிப்பு நிகழ்வு இடம்பெற்றன.
ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் டயஸ் , கஜபா படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, , உலக புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் மகேல ஜயவர்தன மற்றும் இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க அவர்களினால் இராணுவ, பாதுகாப்பு சேவைகள், மற்றும் தேசிய அளவிலான மட்டங்களில் பங்கு பற்றி திறமையை வெளிக்காட்டிய வீரர்களுக்கு வர்ணங்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.
சிறந்த பெறுபேறுகளை பெற்ற 19 விளையாட்டு வீரர்களுக்கு இந்த நிகழ்வின் பிரதம அதிதியான இராணுவ தளபதி பரிசுகளை வழங்கி கௌரவித்தார் கஜபா படையணியில் இருந்து 378 விளையாட்டு வீரர்கள் விளையாட்டு போட்டிகளில் பங்கு பற்றினர். அவற்றில் 101 விளையாட்டு வீரர்கள் திறமைகளை வெளிக்காட்டி சாதனைகளை புரிந்துள்ளனர்.
இந்த நிகழ்வில் கஜபா படையணியின் மூத்த அதிகாரிகள் மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
latest Nike release | 【海外近日発売予定】 サウスパーク × アディダス オリジナルス キャンパス 80S "タオリー" (GZ9177) - スニーカーウォーズ