Header

Sri Lanka Army

Defender of the Nation

18th March 2018 13:38:22 Hours

பெரணிநிலாவேனியில் பாதிக்கப்பட்ட வீடுகளை சீர் திருத்தும் பணிகளில் இராணுவத்தினர்

கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகம் மற்றும் 24 படைப் பிரிவு தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 23 ஆவது சிங்கப் படையணி 3 ஆவது (தொண்டர்) விஜயபாகு காலாட் படையணியின் பங்கேற்புடன் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிரதேசத்தில் பாதிப்புக்கு உள்ளான பெரியநீலவன்னை சீர் திருத்தும் பணிகள் மார்ச் மாதம் 01 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டன.

இந்த புயல் நிமித்தம் 2004 ஆம் ஆண்டு சுனாமி திட்டத்தின் கீழ் நிர்மானிக்கப்பட்ட 75 வீடுகளில் 54 வீடுகளது கூரைகள் கலன்று சேதத்திற்கு உள்ளாகியுள்ளது. மேலும் 432 குடும்பங்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

அனர்த்த முகாமைத்துவமையத்தின் உதவியுடன் இராணுவத்தினர் இந்த சீர் திருத்தும் பணிகளை மேற்கொண்டனர்.

கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்துசித்த பனன்வல அவர்களது பணிப்புரைக்கமைய 24 ஆவது படைத் தளபதி மஹிந்த முதலிகே அவர்களது தலைமையில் இராணுவத்தினரால் இந்த சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த இராணுவத்தினரது பணியை முன்னிட்டு அம்பாறை மாவட்ட செயலாளர் துஷித வனசிங்க மற்றும் அப் பிரதேச மதகுருமார்கள் இராணுவத்தினருக்கு மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்தனர்.

Mysneakers | Nike sneakers