Header

Sri Lanka Army

Defender of the Nation

16th March 2018 11:44:41 Hours

கிளிநொச்சிப் பாதுகாப்பு படைப் பிரிவினரால் கிளிநொச்சிப் பாடசாலை மாணவர்களுக்கான சைக்கிள்கள் வழங்கி வைப்பு

கிளிநொச்சிப் பாதுகாப்பு படைத் தலைமையக படைப் பிரிவினரால் நீர் கொழும்பு லயன்ஸ் கழகத்தின் ஒருங்கிணைப்போடு கிளிநொச்சிப் பாடசாலை மாணவர்களுக்கான சைக்கிள்கள் கடந்த புதன் கிழமை (14) கிளிநொச்சி ஹாமனி மையத்தில் வைத்து வழங்கப்பட்டது.

அந்த வகையில் வறிய குடும்பங்களைச் சேர்ந்த 15 மாணவர்கள் நீர் கொழும்பு லயன்ஸ் கழகத்தின் ஒருங்கிணைப்போடு இம் மாணவர்கள் பெற்றுக் கொண்டனர்.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கிளிநொச்சிப் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன அவர்கள் லயன்ஸ் கழகத்தின் முன்னால் தலைவரான கமிலஸ் பெணான்டோ இக் கழகத்தின் 1ஆவது உப செயலாளரான தேவ பீடர் பிரதி தலைவரான சாவித்திரி பீட்டர் லயன்ஸ் கழகத்தின் செயலாளரான விக்டர் ஸ்டீபன் போன்றௌரும் கலந்து கொண்டனர்.

66 ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியனா மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிட்டிவலான 57படைப் பிரிவின் கட்டளை அதிகாரியனா மேஜர் ஜெனரல் விஜித்த ரவிப்பிரிய 65ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியனா மேஜர் ஜெனரல் குமா பீரிஸ் ஆசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Mysneakers | Nike