Header

Sri Lanka Army

Defender of the Nation

15th March 2018 08:29:59 Hours

2017 ஆம் ஆண்டு சிறந்த உடல்நல பராமரிப்பாளர்களுக்கான விருதுகள்

இராணுவ வைத்திய துறையினுள் புதிய திட்டத்தின் கீழ் கொழும்பு வைத்தியசாலையினால் ஆரம்பிக்கப்பட்ட ஆரோக்கியமான இராணுவம்’ எனும் தொனிப்பொருளின் கீழ் சிறந்த உடல்நல பராமரிப்பாளர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு (14) ஆம் திகதி புதன் கிழமை இடம்பெற்றன.

ஆரோக்கியமான இராணுவம்’ தொனிப் பொருளின் கீழ் நிர்வாக சங்கத்தின் தவைவர் மற்றும் பிரதி பதவி நிலை உத்தியோகத்தர் மேஜர் ஜெனரல் தம்பத் பெர்ணாந்து அவர்களது அழைப்பின் பேரில் இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் வருகை தந்தார்.

2017 ஆம் ஆண்டிற்கான சிறந்த படையணிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 54 , 541 ஆவது படைப் பிரிவிற்கு கீழ் இயங்கும் 25 ஆவது ஹெமுனு ஹேவா படையணி முதலாவது இடத்தையும், 5 ஆவது எந்திரிகள் படையணி இரண்டாவது இடத்தையும் 12 ஆவது கஜபா படையணி மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளது. இந்த வைத்திய பரிசோதனைகள் ‘ ஆரோக்கியமான இராணுவம்’ திட்டத்தின் நிறைவேற்று ஒருங்கிணைப்பாளர் பிரிகேடியர் (வைத்தியர்) ஏ.எஸ்.எம் விஜேவர்தன அவர்களது தலைமையில் இடம்பெற்றன.

இராணுவத்தில் முதல் தடைவையாக நடைபெற்ற ‘ஆரோக்கியமான இராணுவம்’தொணிப்பொருளின் கீழ் நடாத்தப்பட்ட இந்த நிகழ்வானது இராணுவ தளபதியின் முழு ஆசிர்வாதத்துடன் நாடு முழுவதும் சேவையாற்றுகின்ற இராணுவத்தினரது சுகாதார உடல் பராமரிப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்த நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக வருகை தந்திருக்கும் இராணுவ தளபதியை பிரதி பதவி நிலை உத்தியோகத்தர் மேஜர் ஜெனரல் தம்பத் பெர்ணாந்து மற்றும் இராணுவ சுகாதார சேவை பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (வைத்தியர்) சஞ்ஜீவ முனசிங்க அவர்களினால் வரவேற்கப்பட்டது.

பின்னர் நாட்டிற்காக தம்மை உயிர் தியாகம் செய்த படை வீரர்களை நினைவு படுத்தி இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் நிறைவேற்று ஒருங்கிணைப்பாளர் பிரிகேடியர் (வைத்தியர்) ஏ.எஸ்.எம் விஜேவர்தன அவர்களினால் வரவேற்புரை ஆற்றப்பட்டன.

இந்த வைத்திய பரிசீலனைகள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட படையணிகளின் கட்டளை அதிகாரிகளுக்கு சான்றிதல்கள் மற்றும் நினைவுச் சின்னங்கள் பரிசளிக்கப்பட்டன இந்த பரிசுகள் இராணுவ தளபதி, இராணுவ பிரதி பதவி நிலை உத்தியோகத்தர், இராணுவ சுகாதார சேவை பணிப்பாளர் அவர்களினால் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் இராணுவ நடன குழுவினரது நடன நிகழ்வுகள் இடம்பெற்றன.

முதல் தடைவையாக இராணுவ தளபதியின் எண்ணக் கருவிற்கமைய படையணிகளில் இந்த பரிசீலனை நடவடிக்கைகளை மேற்கொண்டு படையினரது உடல் திறனை வலுவடையச் செய்யும் செயற்பாடாக விளங்குகின்றது. இந்த திட்டத்தின்’ மூலம் நாட்டின் அனைத்து பிரதேசங்களிலுள்ள இராணுவ முகாம்களில் செயலமர்வுகள் இடம்பெற்றுள்ளன.

2014 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இராணுவ சுகாதார கல்வி நிறுவனத்தினால் இராணுவ முகாம்களில் கழிவான இடங்களை கண்டு பிடித்து அவற்றை சீர்திருத்தியும் புகை பிடிப்பாளர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்குகள் மேற் கொள்ளப்பட்டன.

அத்துடன் இராணுவ முகாமினுள் மதுபாணம் மற்றும் புகைப் பிடித்தலுக்கு தடைவிதித்து இராணுவத்தினரது மனத்தைரியத்தை உருதிப் படுத்தும் நடவடிக்கைகள் இந்த திட்டத்தின் மூலம் மேற் கொள்ளப்பட்டுள்ளன. அத்துடன் நாளாந்தம் உண்ணக்கூடிய சத்தான உணவு தொடர்பான விழிப்புணர்வுகள் நடாத்தப்பட்டன.

Best Authentic Sneakers | 【国内4月24日発売予定】ナイキ ウィメンズ エア アクア リフト 全2色 - スニーカーウォーズ