14th March 2018 09:54:16 Hours
இராணுவ பதவி நிலை பிரதானி மற்றும் இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர அவர்கள் இராணுவ சேவையிலிருந்து ஓய்வு பெறுவதற்கு உள்ளார். அவரது சேவைகளை கௌரவித்து பனாகொட இலேசாயுத காலாட் படையணி தலைமையகத்தில் (13) ஆம் திகதி அவருக்கு பிரியாவிடை நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.
1981 ஆம் ஆண்டு கெடெற் அதிகாரியாக இராணுவத்தில் இணைந்தார். தற் பொழுது இராணுவ சேவையில் 36 வருட சேவைகளை பூர்த்தி செய்து மேஜர் ஜெனரல் பதவியை வகித்து 2018 ஆண்டு மார்ச் மாதம் (13) ஆம் திகதி இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றுச் செல்கின்றார்.
இந்த நிகழ்விற்கு வருகை தந்த பாதுகாப்பு பதவி நிலை பிரதானியை இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதி பிரிகேடியர் எம். எம் கித்சிரி அவர்கள் வரவேற்றார். பின்பு இலேசாயுத காலாட் படைத் தளபதி மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர அவர்களுக்கு இராணுவ சம்பிரதாய முறைப்படி இராணுவ அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.
அதனை தொடர்ந்து பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பதவிநிலை கல்லூரியின் கட்டளை தளபதி மற்றும் இலேசாயுத காலாட் படையணியின் புதிய படைத் தளபதியான மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க அவர்களினாலும் இவர் வரவேற்கப்பட்டார்.
இராணுவத்தினுள் திறமையாக சேவையை ஆற்றிய சிறந்த அதிகாரியான மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர அவர்கள் இராணுவத்தில் அதி உயர் பதவியான பதவி நிலை பிரதானி பதவியை வகித்து இலேசாயுத காலாட் படையணிக்கு பெருமையை சேர்த்து தந்து இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றுச் செல்கின்றார்.
இவர் இலேசாயுத காலாட் படையணியில் அமைந்துள்ள இராணுவ நினைவு தூபிக்கு மலரஞ்சலி செலுத்தி தனது மன்ப்பூர்வமான கௌரவத்தை தெரிவித்தார். ,அத்துடன் படைத் தலைமையகத்தில் அனைத்து இராணுவத்தினருடன் இணைந்து குழுப் புகைப்படத்திலும் இணைந்திருந்தார்.
Authentic Nike Sneakers | Fullress , スニーカー発売日 抽選情報 ニュースを掲載!ナイキ ジョーダン ダンク シュプリーム SUPREME 等のファッション情報を配信!