Header

Sri Lanka Army

Defender of the Nation

10th March 2018 11:44:39 Hours

மகளீர் தினத்தை முன்னிட்டுஇராணுவ மகளீர் படையணியினால் நிகழ்ச்சிகள்

மகளீர் தினத்தை முன்னிட்டு பொலன்னறுவை றோயல் கல்லூரி மைதானத்தில் பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு மற்றும் இலங்கை மகளிர் அமைச்சு இணைந்து கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஒத்துழைப்புடன் நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

சமுதாயத்தில் பெண்களுக்கு அதிகாரம் வழங்குவதற்கான அடையாளங்களை வெளிப்படுத்தும் முகமாக நடனம், உடற்பயிற்சி போன்ற இராணுவத்தினரது நிகழ்வுகள் இடம்பெற்றன. பொலனறுவையில் முதல் தடவையாக இரண்டு இராணுவ பெண் அதிகாரிகளான, கெப்டன் ஐ.பீ.எம்.ஐ விக்ரமசிங்க மற்றும் கெப்டன் ஐ. டீ.டீ முதுமாலி , ஆறு விமானப்படை மகளீர் உத்தியோகத்தர்கள் 6 பேர் 7000 அடி உயர வானத்திலிருந்து பரிசூட் மூலம் பூமியை வந்தடைந்து சாகசங்களை புரிந்தனர்.

இதேபோல், உடல் பயிற்சிகளை காட்சிகள் 150 இராணுவ வீராங்கனைகளால் மேற்கொள்ளப்பட்டன. அத்துடன் இராணுவ மகளீர் படையணி வீராங்கனைகள் 55 பேரது பங்களிப்புடன் இசை நடன நிகழ்ச்சிகளும் இந்த மைதானத்தில் இடம்பெற்றன.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக மகளீர் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சின் கௌரவ அமைச்சர் திருமதி சந்திரசிறி பண்டார அவர்கள் வருகை தந்தார்.

பொலன்னறுவை மாவட்ட செயலாளர், திரு. ரஞ்சித் ஆரியரத்ன, கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்துசித்த பனன்வல, கிழக்கு முன்னரங்க பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் மனோஜ் முதன்நாயக்க மற்றும் ‘பொலன்னருவையின் எழுச்சி’ பணிப்பாளர் ஓய்வு பெற்றமேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க அவர்கள் வருகை தந்திருந்தனர்.

Adidas footwear | 2021 New adidas YEEZY BOOST 350 V2 "Ash Stone" GW0089 , Ietp