10th March 2018 10:49:04 Hours
இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக திகன, அகுரண, கலஹா, கடுகஸ்தொட ,மெனிக்கின்ன, அம்பதென்ன, பூஜாபிடிய சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லீம் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களிற்கு சென்று அவர்களது பிரச்சினைகளை ஆராய்ந்து பார்த்தார்.
கண்டி வியாபார சங்கத்தினருடன் இராணுவ தளபதி சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார். இந்த சந்திப்பின் போது கடந்த தினங்களில் கண்டி மாவட்டத்தில் எற்பட்டிருந்த இனக் கலவரம் தொடர்பாக பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. மேலும் இராணுவ தளபதி இனங்களுக்கு இடையில் சமாதான நல்லிணக்கம் தொடர்பாக இந்த சந்திப்பின் போது வலியுறுத்தினார்.
மேலும் இப்பிரதேசத்தில் நிலையான சமாதான நல்லினக்கத்தை மேம்படுத்தி இனங்களுக்கு இடையில் இருக்கும் பிரச்சினைகளை தனித்து சமாதானத்தை நிலை நாட்டும் நோக்கத்துடன் இலங்கை இராணுவத்தினர் இப்பிரதேசங்களில் கடமைகளில் ஈடுபட்டுள்ளனர்.
அத்துடன் இப்பிரதேசங்களில் சமாதானத்தை நிலை நாட்டுவது இராணுவம் மற்றும் பொலிஸாரது பொறுப்புகள் மட்டுமின்றி இப்பிரதேசவாசிகள் ஆகிய நீங்களும் இதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று இராணுவத்தினர் அப்பிரதேச மக்களிடம் வேண்டுகோளிட்டார்.
மீண்டும் இப்பிரதேசத்தில் கலவர நிலைமைகளை தனித்து சமாதான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இராணுவத்தினரது முழுமையான ஒத்துழைப்பு இந்த பிரதேசங்களில் வழங்குவார்கள் என்று இராணுவ தளபதி மேலும் கூறினார்.
எதிர்காலத்தில் இப்படியான நிலைமைகள் வராமல் தடுத்து கலவரத்தின் போது சேதமாக்கப்பட்ட கட்டிடங்கள் இந்த வருடம் எப்ரல் மாதம் ஆகும்போது அரச நிதி உதவியுடன் இராணுவத்தினரது ஒத்துழைப்புடன் நிர்மான பணிகள் மேற்கொள்ளப்படும் என்று இராணுவ தளபதி மேலும் கூறினார்.
இராணுவ தளபதி கண்டி மாவட்ட செயலாளர் அவர்களை சந்தித்தும் கலந்துரையாடலையும் மேற்கொண்டார். அத்துடன் மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருக்மள் டயஸ் மற்றும் 11 ஆவது படைப் பிரிவன் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருக்மள் டயஸ் அவர்களையும் சந்தித்து பாதுகாப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடாத்தினார்.
Sportswear free shipping | New Balance 327 Moonbeam , Where To Buy , WS327KB , Air Jordan 1