11th February 2018 13:59:00 Hours
ஹம்பாந்தோட்டையில் அமைந்துள்ள 12 ஆவது படைப் பிரிவின் புதிய படைத் தளபதியாக மேஜர் ஜெனரல் நிஷாந்த வன்னியாரச்சி அவர்கள் உத்தியோகபூர்வமாக (9) ஆம் திகதி வௌளிக் கிழமை தனது கடமையை பொறுப்பேற்றார்.
புதிய படைத் தளபதிக்கு 10 ஆவது (தொண்டர்) கெமுனு ஹேவா படையணியினால் இராணுவ சம்பிரதாய முறைப்படி இராணுவ அணிவகுப்பு மரியாதைகள் வழங்கப்பட்டன.
அதனை தொடர்ந்து படைத் தளபதியினால் உத்தியோகபூர்வமாக கையொப்பமிட்டு தனது பதவியை பொறுப்பேற்று தலைமையக வளாகத்தினுள் மரநடுகை நிகழ்வையும் நிகழ்த்தினார்.
மேலும் முன்னாள் 12 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் ஹரேன் பெரேரா அவர்களுக்கு வியாழக் கிழமை (8) ஆம் திகதி தலைமையகத்தில் பிரியாவிடை மற்றும் அணிவகுப்பு மரியாதைகள் இராணுவத்தினரால் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்விற்கு அனைத்து படைத் தலைமையகத்தின் படைத் தளபதிகள் மற்றும் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Sports Shoes | Nike