11th February 2018 13:53:55 Hours
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 59 ஆவது படைப் பிரிவின் புதிய படைத் தளபதியாக பிரிகேடியர் ருவன் வனிகசூரிய அவர்கள் உத்தியோகபூர்வமாக தனது கடமையை வியாழக் கிழமை (8) ஆம் திகதி பதவியேற்றார்.
புதிய படைத் தளபதிக்கு 59 ஆவது படைப் பிரிவின் தலைமையகத்தினால் இராணுவ சம்பிரதாய முறைப்படி இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து புதிய படைத் தளபதியினால் தனது பதவியேற்பின் பின்பு படைத் தலைமையக வளாகத்தினுள் மரநடுகை மற்றும் தேநீர் பிரியாவிடை நிகழ்வு இடம்பெற்றன.
மேலும் முன்னாள் 59 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் நிஷாந்த வன்னியாரச்சி அவர்களுக்கு (6) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை இராணுவ சம்பிரதாய முறைப்படி இராணுவ அணிவகுப்பு மரியாதைகள் வழங்கப்பட்டன.
இந் நிகழ்விற்கு 591, 592 மற்றும் 593 ஆவது படைத் தளபதிகள் மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Asics footwear | adidas Yeezy Boost 700 , Ietp