06th February 2018 19:33:19 Hours
70ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பங்களிப்போடு பெலான்நறுவை பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்போடு பொலன்நறுவை ரோயல் கல்லுhரி மைதானத்தில் இடம் பெற்றது.
அந்த வகையில் ரோயல் கல்லுாரி மாணவர்கள் ஜயமங்கள இசையை இசைத்ததுடன் தாய் நாட்டிற்காக உயிர் நீத்தவர்களை நினைவு கூறும் நோக்கில் இரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
அதன் பின்னர் இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக வருகை தந்த வட மத்திய மாகான ஆளுனரான திரு பி பீ திசாநாயக்க அவர்களுக்கு இராணுவ அணிவகுப்ப மரியாதை வழங்கப்பட்டு பல கலாச்சார நிகழ்வுகளும் இடம் பெற்றன.
அந்த வகையில் மத குருமார்கள் பொலன்நறுவை மாவட்ட செயலாளர் கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்துசித்த பன்னவெல அரச அதிகாரிகள் பொலிஸ் திணைக்கள உயர் அதிகாரிகள் சிவில் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்கள் போன்றனர் கலந்து கொண்டனர். அத்துடன் இராணுவத்தினர் பலவாறான நிகழ்வுகளையும் வழங்கி வைத்தனர்.
best Running shoes brand | Patike – Nike Air Jordan, Premium, Retro Klasici, Sneakers , Iicf