05th February 2018 16:48:59 Hours
முல்லைதீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 68ஆவது படைப் பிரிவினரின் ஒழுங்கமைப்பில் கொழும்பு ஏ.ஏ சமரசிங்க கண் ஒப்டிகல்வைத்தியர்களால் பார்வையற்றவர்களுக்கு மொபையில் கண் பரிசோதனையும் 350 சோடி கண்ணாடி வில்லைகள் வழங்கும் நிகழ்வும் கடந்த (04)ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை புதுகுடியிருப்பு மத்திய மகா வித்தியாலய வளாகத்தில் இடம் பெற்றது.
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தினரின் வேண்டுகோளுக்கமைய கொழும்பு ஏ.ஏ சமரசிங்க கண் ஒப்டிகல்ரால் தமது 50ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு பிரதேசத்தின் சிவில் மக்கள் 350ற்கும்; மேற்பட்ட மக்களின் நலன் கருதி இந்த கண் வைத்திய பரிசோதனை கிளினிக்குகளை மேற்கொண்டனர்.
பரிசோதனையின் பின் தேர்தெடுக்கப்பட்ட 350 சிவில் மக்களுக்கு ஒரு கண்ணாடி வில்லைக்கான பொறுமாதி 1250/=ரூபா வீதத்தில் இவர்களுக்கு 437>500/= ரூபா பெறுமதியான கண்ணாடிகள் இலவசமாக வழங்கப்பட்டது.
இந் நிகழ்வானது முல்லைத் தீவு பாதுகாப்பு படைத் தலைமையக கட்டளை தளபதியான மேஜர் ஜெனரல் துஷ்;யந்த ராஜகுரு அவர்களின் வழிகாட்டலின் கீழ் 68 ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரியவர்களின் தலைமையில் நடைப் பெற்றது.
இந் நிகழ்விற்கு பிரதான விருந்தினராக 59ஆவது படைப்பிரிவின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் நிசாந்த வன்னியாராச்சி கலந்து கொண்டார்.
இதற்கிடையில்> முல்லைதீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 59>64 மற்றும் 68ஆவது படைப்பிரிவினர்களால் இலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் நோக்கமாக (04) (04)ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை இப்பிரதேச மக்களின் பொருளாதரத்தை ஊக்குவிக்கும் முகமாக 1200 மரக்கன்றுகளும் வழங்கப்பட்டது. இம் மரங்களில் (750) பலா>(300) புலியமரம் (150) மகொகனி மரங்களும் உள்ளடங்கும்.
இந்த நிகழ்வில் முல்லைதீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் துஸ்யந்த ராஜகுரு மற்றும் அதிகாரிகள் படையினர் மறறும் பொதுமக்களும்கலந்து கொண்டார்கள்.
Nike Sneakers Store | Nike Running