Header

Sri Lanka Army

Defender of the Nation

04th February 2018 13:53:40 Hours

படையினரின் பங்களிப்புடன் ஹிகுரக்கொடை சந்தன பொக்குன குளக்கட்டின் மீள் திருத்தப் பணிகள் முன்னெடுப்பு

ஹிகுரக்கொடை சந்தன பொக்குன குளக்கட்டினை சுத்திகரித்து மீள் நிர்மானப் பணிகளை மேற்கொள்ளுமாறு மின்னேரியாவின் ஹிகுரக்கொடை பிரதேசவாசிகளினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கிணங்க பிபிதெமு பொலன்னறுவை எனும் திட்டத்திற்கு அமைவாக கிட்டத் தட்ட 200 சிவில் பாதுகாப்பு குழுவினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து கடந்த புதன் கிழமை (31) இப் பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

அந்த வகையில் இராணுவத் தளபதியவர்களின் 1/3 பங்கு படையினரின் நாட்டைக் கட்டியெழுப்பும் திட்டத்திற்கு அமைவாக கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் சந்துசித பனன்வெல அவர்களின் தலைமையில் இப் பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

அந்த வகையில் இச் சந்தன பொக்குன குளக்கட்டானது அரச காலத்திலிருந்தே காணப்படுவதுடன் இக் குளக்கட்டானது பெரும்போகங்களிற்கு பாரிய நீரைப் பாய்ச்ச வல்லது. இக் குளக்கட்டின் மூலம் கிட்டத் தட்ட 325 குடும்பங்கள் பயன்பெறுகின்றனர். ஆயினும் கிட்டத் தட்ட 20 வருட காலமாக இக் குளக்கட்டு தொடர்பான எவ்வித சுத்திகரிப்பு பணிகளும் அரச அதிகாரிகளினால் முன்னெடுக்கப்படாமையின் காரணமாக 42.2 ஏக்கர் அளவிலான பரப்பிற்கு பாசி படிந்து அழுக்கடைந்த நீரே பாய்ச்சப்படுகின்றது. இதன் காரணமாக இப் பிரதேச வாசிகள்இவ்விடயம் தொடர்பாக மதிப்பிற்குறிய மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு முறையிட்டனர்.

மேலும் இராணுவத் தளபதியவர்களின் ஆலோசனையில் பிபிதெமு பொலன்னறுவை திட்டத்தின் பணிப்பாளரான பிரிகேடியர் சந்தன விஜேசுந்தர அவர்களின் கண்காணிப்பில் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியவர்களின் வழிகாட்டலில் பாதுகாப்பு திணைக்கள மற்றும் இராணுவத்தினரின் உதவியூடன் கடந்த புதன் கிழமை (31) இப் பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

இக் குளக்கட்டின் மீள் சுத்திகரிப்பு பணிகளை மேற்கொண்டதன் பிற்பாடு 1000ற்கும் மேற்பட்ட பயிர் செய்கைகளுக்கு நீரைப் பாய்ச்சக் கூடிய நிலைமையில் காணப்படுகின்றது.

அந்த வகையில் நாட்டின் முன்னேற்றத்தைக் கருத்திற் கொண்டு கிரமா வாசிகளின் பொருளாதாரத்தை முன்னேற்றும் நோக்கில் சமூர்த்தி மற்றும் பல அபிவிருத்தித் திட்டங்களின் மூலம் புதியதோர் தலைமுறையைக் கட்டியெழுப்பும் நோக்கில் பாதுகாப்பு அமைச்சின் உதவியோடு இப் பணிகளை முன்னெடுக்க ஜனாதிபதிச் செயலகம் ஆலோசனை வழங்கியுள்ளது.

இத் திட்டமானது ஜனாதிபதிச் செயலகத்தின் கண்காணிப்பின் கீழ் பொலன்நறுவை மாவட்டத்தின் கிராம அபிவிருத்திச் சங்கம் கிராம சேவகர்கள் சமூர்த்தி அதிகாரிகள் விவசாயச் சேவைகள் திணைக்களம் மற்றும் விவசாயத் திணைக்களத்தின் பங்களிப்புடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ரஜரட்ட நவோதய எனும் திட்டதின் பிபிதெமு பொலன்நறுவை எனும் திட்டத்தின் கீழ் இராணுவ பொறியியலாளர்ப் படையினர் பொறியியலாளர் சேவைப் படையினர் கடற் படை மற்றும் விமானப் படை அதிகாரிகள் பொலன்நறுவை பிரதேச செலயகத்திற்கு உற்பட்ட 07 பாடசாலைகள் மத வழிபாட்டு ஸ்தலங்கள் அரச வைத்தியசாலைகள் விளையாட்டு மையங்கள் பொது இடங்கள் குளக் கட்டின் அடிப்படை கட்டுமானப் பணிகளின் போன்றவற்றின் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படுவதுடன் சீன அரசாங்கமானது தமது அனுசரனையையூம் இதற்க வழங்கியுள்ளது.

அந்த வகையில் இச் சந்தன பொக்குன குளக் கட்டின் மீள் திருத்தப் பணிகள் பிபிதெமு பொலன்நறுவை எனும் திட்டத்தின் பணிப்பாளரான பிரிகேடியர் சந்தன விஜேசுந்தர அரச அதிகாரிகள் மற்றும் சிவில் திணைக்கள அதிகாரிகளின் பங்களிப்போடு மேற்கொள்ளப்படுகின்றது.

Best Nike Sneakers | adidas Yeezy Boost 350