Header

Sri Lanka Army

Defender of the Nation

02nd February 2018 23:43:11 Hours

57 ஆவது படைப் பிரிவின் கட்டளை தளபதி வெளியேறும் நிகழ்வு

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 57 ஆவது படைப் பிரிவில் கட்டளை தளபதியாக கிட்டதட்ட ஒருவருட காலமாக சேவையில் இருந்த மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன அவர்கள் தமது கடமையில் இருந்து வெளியேறும் நிகழ்வு கடந்த (30)ஆம் திகதி 57 ஆவது படைப் பிரிவில் இடம் பெற்றது.

இராணுவ சம்பிரதாயத்தின்படி 57ஆவது படைப்பிரிவின் இராணுவ அதிகாரிகள் மற்றும் படையினரும் இணைந்து ஏற்பாடுஇந்தநிகழ்வைஎற்பாடு செய்திருந்தனர்.

அதனைத்தொடர்ந்து57ஆவது படைப்பிரிவின் வளாகத்தில் 1ஆவது இலங்கை இராணுவ சிங்க படையணியினர் மற்றும் 6ஆவது இலங்கை இராணுவ சிங்க படையணியினரால் படைப்பிரிவில் இருந்து வெளியேறும் இக் கட்டளை அதிகாரிக்கு பாதுகாப்பு கௌரவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து இப் படைத் தளபதியினால் படையினருக்கு உரையாற்றும் நிகழ்வும் இடம் பெற்றது.

தொடர்ந்து அனைத்து படையினர்களுடன் தேநீர் விருந்துபசாரம் மற்றும் இராவு உணவின் பின் வெளியேறும் தளபதிக்கு சேவையை கௌரவப்படுத்தும் வகையில் நினைவு சின்னமும் வழங்கப்படட்து.

இந் நிகழ்வில் படைத்தளபதிகள்,கட்டளை அதிகாரிகள் மற்றும் அனைத்து படையினரும் கலந்து கொண்டார்கள்.

தனது பதவியைத் தொடர்ந்து, மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்த்தன அவர்கள் இராணுவ தலைமையகத்தில் புதிய மாஸ்டர் ஜெனரல் பதவியேற்கவுள்ளார்.

Sport media | Air Jordan 1 Retro High OG "UNC Patent" Obsidian/Blue Chill-White For Sale – Fitforhealth