02nd February 2018 13:45:30 Hours
கெமுனு ஹேவா படைத் தலைமையகத்தினால் முன்னெடுக்கப்படும் உதாரய் ஒப திட்டத்திற்கு ஆர்யா மன்றத்தினால் உதவிகள் வழங்கப்பட்டன. அந்த வகையில் இத் திட்டமானது உளநல சுகாதார அபிவிருத்தி போன்றவற்றை மையமாகக் கொண்டு பல அனுசரனைகள் வழங்கப்பட்டதோடு இந் நிகழ்வானது இரத்தினபுரியில் உள்ள குருவிட்ட கெமுனு ஹேவா படைத் தலைமையக கேட்போர் கூடத்தில் கடந்த சனிக் கிழமை (27) இடம் பெற்றது.
அந்த வகையில் இப் படைத் தலைமையக தளபதியூம் இராணுவப் பதவி நிலைப் பிரதானியூமான மேஜர் ஜெனரல் தம்பத் பெணான்டோ அவர்களின் ஆலோசனைக்கமைய இத் திட்டமானது முன்வைக்கப்பட்டதோடு ஊனமுற்ற படையினரின் உள நலத்தை மேம்படுத்தும் நோக்கில் இத் திட்டம் அமைகின்றது.
மேலும் இத் திட்டத்தின் மூலம் 100 ஜோடி ஊன்றுகோல்கள் 20 இழுப்பறைகள் ஒரு தொலைக்காட்சி மற்றும் பல வாசிப்பு புத்தகங்கள் போன்றன கெமுனு ஹேவா படைத் தலைமையக நுhலகத்திற்கு ஆர்யா மன்றத்தினால் வழங்கப்பட்டது
இந் நிகழ்வில் ஆர்யா மன்றத்தின் நாற்பது உறுப்பினர்கள் முன்னய இராணுவத் தளபதிகளுள் ஒருவரான ஜெனரல் சாந்த கொட்டேகொட (ஓய்வு) தற்போது ஆர்யா மன்றத்தின் நிர்வாக அதிகாரியான இவரும் ஆர்யா மன்றத்தின் தலைவரான சாரித் கிரியெல்ல பிரதி நிர்வாக அதிகாரியூம் நடிகருமான பந்து சமரசிங்க டக்லஸ் ரணசிங்க போராசிரியர் ஆரியரத்தின களுஆராச்சி திருமதி ஆச்ஆரிய பீரிஸ் மற்றும் பல வர்த்தகர்கள் போன்றௌர் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வின் இறுதியில் சென்டர் கெமடான்ட் பிரிகேடியர் ஜயம்பதி திலகரத்தின அவர்களால் முன்னய இராணுவத் தளபதிகளுள் ஒருவரான ஜெனரல் அவர்களுக்கும் ஆர்யா மன்றத்தின் உறுப்பினர்களுக்கும் நினைவுச் சின்னங்களை வழங்கி வைத்துள்ளார்.
சில நிமிடங்களின் பின்னர் கெமுனு ஹேவா படையணியின் யூத்தத்தின் போது உயிர் நீத்த படையினருக்கான நினைவஞ்சலியும் இவர்களால் வழங்கப்பட்டது. அத்துடன் இவர்களுக்கான மதிய உணவு வேளையும் இவர்களுக்காக வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் சென்டர் கெமடாண்ட் உள்ளடங்களாக ஐம்பது அதிகாரிகள் மற்றும் 600 படையினர் போன்றௌர் கலந்து கொண்டனர்.
Sneakers Store | balerínky