Header

Sri Lanka Army

Defender of the Nation

02nd February 2018 13:00:59 Hours

இராணுவத்தினர் தமது விளையாட்டு திறமைகளை வெளிநாடுகளில் வெளிப்படுத்தினர்

இராணுவ பேண்ட் மற்றும் நாடகக் கலைஞர்கள் சில வெளிநாட்டு கலைஞர்களுடன் இணைந்து தமது கலை வெளிப்பாடுகளை நன்கே வெளிநாடுகளில் பிரதிபலித்தனர்.

அந்த வகையில் இத் திறமை மிக்க இராணுவக் கலைஞர்கள் இலங்கை உட்பட வெளிநாடுகளான நியூசிலாந்து ரஷ்யா சீனா மற்றும் அலெக்ஸ்சன்ரியான (கிரேக்கம்) பேர்லின்(ஜேர்மன்) மாலைதீவு போன்ற நாடுகளில் 2018ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பலவாறான நிகழ்வுகள் இடம் பெற்றன.

மேலும் இக் குழுவினர் நாடளாவிய ரீதியில் தமது திறமையை வெளிக்காட்டியதுடன் கடந்த புதன் கிழமை (31) எகிப்து நாட்டிற்கான 7 நாட்கள் பயணத்தை இலங்கை துhதரகத்தின் உதவியுடன் மேற்கொண்டனர்.

அதேவேளை முப் படைகளையும் உள்ளடக்கிய கலைஞர்களின் குழுவினர் ஜெர்மன் நாட்டிற்கு 2018ஆம் ஆண்டு பெப்ரவரி 2ஆம் திகதி பயணத்தை மேற்கொண்டனர். இக் குழுவில் 5இராணுவத்தினர் 5கடற் படையினர் மற்றும் 5விமானப் படையினர் போன்றௌர் கலந்து கொண்டனர்.

அத்துடன் சில குழுவினர் மாலைதீவுப் பிரதேசத்திற்கு கலை நிகழ்வுகளுக்காக இலங்கையில் 70ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பயணிக்கவுள்ளனர்.

அந்த வகையில் இக் குழுவினர் தமது கலாச்சார நிகழ்வுகளை உலகலாவிய ரீதியில் தமது திறமைகளை வெளிப்படுத்தும் நோக்கில் காணப்படுகின்றனர். அத்துடன் இக் கலைஞர்கள் பலவாறான திறமை மிக்க கலை வெளிப்பாடுகளை வெளிப்படுத்தும் நோக்கில் பல வண்ண மயமிக்;க ஆடை அலங்காரங்களுடன் இலங்கை நாட்டின் கலாச்சார நடனங்களை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்த வகையில் கிட்டத் தட்ட 700 கலைஞர்கள் பங்கேற்ற இந் நிகழ்வில் பலவாறான நடன நிகழ்வுகள் இக் குழுவினரால் ஆடப்பட்டன.

அந்த வகையில் கடந்த 2017ஆம் ஆண்டு .சீனாவிலும் இவ்வாறான கலைஞர்களின் தலைமையில் கலை வெளிப்பாடுகள் வெளிக்காட்டப்பட்டன.

அந்த வகையில் இராணுவ நடன மற்றும் நாடகப் பணிப்பகத்தின் பணிப்பாளராக பிரிகேடியர் எம் எச் எப் யூசுப் போன்றௌர் கலந்து கொண்டனர்.

மேலும் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் இக் குழுவினருக்கான நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார்.

jordan release date | Nike Shoes