31st January 2018 17:51:13 Hours
இலங்கை இராணுவத்தில் முதன் முறையாக பெருமையோடு ஓட்டு எனும் தலைப்பிலான சைக்கில் ஓட்டப்போட்டியானது பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் மற்றம் இராணுவத்தினரின் பங்களிப்போடு கடந்த புதன் கிழமை (31) பத்தரமுல்லைப் பிரதேசத்தில் உள்ள காலை வேளை உயிர் நீத்த படை வீரர்களின் நினைவுத் துாபியிலிருந்து ஆரம்பமானது.
பத்தரமுல்லையில் இடம் பெற்ற இந் நிகழ்விற்கு வருகை தந்த இராணுவத் தளபதியவர்களை இராணுவப் பதவிநிலைப் பிரதானியான மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர அவர்கள் வரவேற்றார்.
இப் போட்டியில் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் கலந்து கொண்டார்.
அந்த வகையில் இம் மாபெரும் போட்டியில் 300ற்கும் மேற்பட்ட முப் படையினர் மற்றும் சிவில் சேவைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டதுடன் இப் போட்டிகளுக்கான ஒழுங்குகளை இராணுவ விளையாட்டு பணிப்பகத்தின் பணிப்பாளரான மேஜர் ஜெனரல் அருண சுதசிங்க மற்றும் இராணுவ சைக்கிள் ஓட்ட சங்கத்தின் தலைவரான பிரிகேடியர் துமிந்த சிறிநாக அவர்களின் பங்களிப்போடும் இடம் பெற்றது.
இவ்வாறு ஆரம்பமான போட்டிகள் தலவத்துகொடை பெலவத்தை பன்னிப்பிட்டிய கொட்டாவை ஹோமாகமை மற்றும் பிட்டிப்பான போன்ற சந்திகளில் ஆரம்பமானதுடன் பனாகொடை இராணுவத் தலைமையக உடற் கட்டமைப்பு பகுதிவரைச் சென்று நிறைவடைந்தது.
இவ்வாறு பனாகொடையல் நிறைவு பெற்ற போட்டி நிகழ்வூகளின் பிற்பாடு இராணுவத் தளபதியவர்கள் உள்ளடங்களான பல உயர் அதிகாரிகள் இப் படைத் தலைமையகத்தில் காணப்பட்ட கிராமிய விளையாட்டுப் பகுதிகளையும் பார்வையிட்டார்.
Buy Sneakers | Nike Off-White