01st February 2018 13:32:28 Hours
கிளிநொச்சிப் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தலைமையில் மலேசிய மஹா கருணா நலன்புரிச் சேவை சங்கத்தினரின் அனுசரனையில் கிளிநொச்சிப் பிரதேசத்தைச் சேர்ந்த கிட்டத் தட்ட 500 பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலை உபகரணப் பொருட்கள் வழங்கப்பட்டதோடு இவ்வாறான பல நலன்புரிச் சேவைகளை இம் மலேசிய மஹா கருணா நலன்புரிச் சேவை சங்கத்தினர் வடக்கில் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் கிளிநொச்சிப் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன அவர்களின் தலைமையில் மலேசிய மஹா கருணா நலன்புரிச் சேவை சங்கத்தினரின் அனுசரனையில் இருவேறு பகுதிகளாக 66ஆவது மற்றும் 65ஆவது படைப் பிரிவூகளில் இந் நிகழ்வுகள் இடம் பெற்றது.
அந்த வகையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை (28) இடம் பெற்ற இந் நிகழ்வூகளில் கிளிநொச்சி ஜயபுரம் மகா வித்தியாலயத்தின் 250 மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் 66ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிட்டிவெல மற்றும் 663ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான பிரிகேடியர் சுபாஷன வெலிகல அவர்களின் தலைமையில் வழங்கப்பட்டது.
அன்றய தினம் (28) மாலை வேளை இம் மலேசிய மஹா கருணா நலன்புரிச் சேவை சங்கத்தினரின் அனுசரனையில் 65ஆவது படைப் பிரிவிற்குற்பட்ட துனுக்காய் மற்றும் மல்லாவி பிரதேச பாடசாலை சிறார்களுக்கான பாடசாலை உபகரணப் பொருட்கள் வழங்கப்பட்டதோடு இதற்கான ஏற்பாடுகளை 65ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் சரத் வீரவர்தன மற்றும் 653ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான கேர்ணல் ஜனாக பிரியதர்ஷன போன்றௌரின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டன.
இவ்விரு நிகழ்வுகளிற்கும் பிரதம அதிதியாக தலைமை தாங்கிய கிளிநொச்சிப் பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன மற்றும் மலேசிய மஹா கருணா நலன்புரிச் சேவை சங்கத்தினரின் தலைவரான முகுனுவெல அனுருத்த தேரர் அவர்களின் அனுசரனையில் இடம் பெற்றது.
இந் நிகழ்வில் மலேசிய மஹா கருணா நலன்புரிச் சேவை சங்கத்தின் செயலாளர்கள் உலக பௌத்த வாலிப சங்கத்தின் பணிப்பாளரான சகோதரரர் ஜெகம் சன் டெங் மற்றும் இச் சங்கத்தின் தேரர்களான ஸ்ரீ சரனாகர நாயக்க தேரர் மற்றும் அனுருத்த தேரர் பேன்றௌர் கலந்து கொண்டனர்.
மேலும் இந் நிகழ்வில் 65ஆவது மற்றும் 66ஆவது படைத் தலைமையகங்களின் கட்டளை அதிகாரிகள் உயர் அதிகாரிகள் பாடசாலை அதிபர்கள் மாணவர்கள் ஆசிரியர்கள் போன்றௌரும் கலந்து கொண்டனர்.
Adidas shoes | Air Jordan Retro - 2021 Release Dates + Preview , Fitforhealth