Header

Sri Lanka Army

Defender of the Nation

31st January 2018 17:50:16 Hours

விஷேட படைத் தலைமையக வளாகத்திள் புதிய கட்டிடம் இராணுவ தளபதியினால் திறந்து வைப்பு

நாவுலையில் அமைந்துள்ள விஷேட படையணி தலைமையக வளாகத்திள் புதிதாக நிர்மானிக்கப்பட்ட கோப்ரல் உணவு விடுதி கட்டிடம் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களினால் (29) ஆம் திகதி திங்கட் கிழமை திறந்துவைக்கப்பட்டது.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக வருகை தந்த இராணுவ தளபதியை விஷேட படைத் தலைமையகத்தின் கட்டளைத் தளபதி வரவேற்று இராணுவ தளபதிக்கு அணிவகுப்பு மரியாதைகள் வழங்கப்பட்டன.

பின்பு இராணுவ தளபதியினால் தலைமையக வளாகத்தினுள் மரநடுகை நிகழ்வு இடம்பெற்றன. அதனை தொடர்ந்து இந்த கோப்ரல் உணவு விடுதி இராணுவ தளபதியினால் திறந்து வைக்கப்பட்டது.

இராணுவ தளபதியினால் படையினர்கள் மத்தியில் உரையும் ஆற்றப்பட்டன. அதனை தொடர்ந்து இராணுவ தளபதி விஷேட படையணி அதிகாரிகளுடன் குழுப் புகைப்படத்திலும் இணைந்திருந்தார்.

இறுதியில் இராணுவ தளபதி விஷேட படையணி அதிகாரிகளுடன் கலந்துரையாடலை மேற்கொண்டார்.

Authentic Nike Sneakers | Zapatillas de running Nike - Mujer