30th January 2018 11:52:24 Hours
2017ஆம் ஆண்டு இடம் பெற்ற இலங்கை மோட்டார் வாகனக் கழகம் மற்றும் வாகன ஓட்டுனர் சங்கங்கள் இணைந்து நடாத்திய போட்டிகளில் சிறந்த திறமையை இராணுவத்தினர் வெளிக்காட்டியுள்ளனர். எனவே இவர்களது திறமைகளைப் பாராட்டி பலவாறான ஊக்கிவிப்பு பாராட்டு நிகழ்வூகள் மேற்கொள்ளப்பட்டன.
அந்த வகையில் இப் பாராட்டு நிகழ்வூகள் தளவத்துகொடை கிராண்ட் மொனாச் விடுதியில் மற்றும் பொரலஸ்கமுவ கோல்டன் ரோஸ் விடுதியில் இடம் பெற்றதோடு இதன் போது மோட்டார் வாகன சங்கம் மற்றும் வாகன ஓட்டுனர் சங்கங்கள் இணைந்து நடாத்திய போட்டிகளில் தமது சிறந்த திறமையை வெளிக்காட்டிய படை வீரர் டீ பீ கே சில்வா (125CC மற்றும் 250CC) அத்துடன் சாதாரண படை வீரர் ஏ டபிள்யூ எல் ஜெ குமாரசிங்க (250CC) போன்றௌர் கௌரவிக்கப்பட்டனர்.
இந் நிகழ்வில் இராணுவ மோட்டார் வாகன சங்கத்தின் தலைவரான மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி அவர்களை முன்னிலைப்படுத்தி இராணுவ மோட்டார் வாகன சங்கத்தின் பிரதி தலைவரான பிரிகேடியர் வசந்த மாதொல மற்றும் இச் சங்கத்தின் செயலாளர் லெப்டினன்ட் கேர்ணல் ரண்தி ஜயசிங்க உள்ளடங்களான நாடளாவிய ரீதியில் உள்ள மோட்டார் வாகன சங்கங்களின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
என்ஜின் 250ற்கு மேற்பட்ட பிரிவில் திறமையை வெளிக்காட்டிய வீரர்களுக்கான பாராட்டுக்களும் பரிசில்களும் வழங்கப்பட்டதோடு இப் போட்டிகளில் கலந்து கொண்ட இராணுவ படையினர்களுக்கான விசேட பிரிசில்கள் இராணுவ மோட்டார் வாகன சங்கத்தினால் வழங்கப்பட்டது.
அந்த வகையில் சர்வதேச மோட்டார் சங்கமானது நாடளாவிய ரீதியில் இரு சக்கர வண்டிகளுக்கான சர்வதேச சங்கமாகக் காணப்படுகின்றது.
மேலும் இலங்கை மோட்டார் வாகனச் சங்கமானது சிறந்த விளையாட்டு வீர வீராங்கனைகள் மற்றும் அதிகாரிகளுக்கான சிறந்த ஒத்துழைப்பை வழங்கியுள்ளது.
அந்த வகையில் இச் சங்கமானது இலங்கை இராணுவம் மற்றும் இலங்கை விமானப் படையை முன்னிலைப் படுத்தி இடம் பெற்றது.
Running sport media | Nike Air Jordan XXX Basketball Shoes/Sneakers 811006-101 Worldarchitecturefestival