Header

Sri Lanka Army

Defender of the Nation

30th January 2018 08:30:26 Hours

யாழ் பாதுகாப்பு படைத் தளபதியினால் பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் பகிர்ந்தளிப்பு

யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன கெட்டியாரச்சி அவர்களது தலைமையில் மலேசியா மகா கருணா பௌத்த மன்றத்தின் அனுசரனையுடன் யாழ்ப்பாணத்தில் வறிய குடும்பத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் 2350 பேருக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வுகள்யாழ் பிரதேசத்தில் வெவ்வேறு ஆறு நிலையங்களில் இடம்பெற்றன.

யாழ்ப்பாணத்திலுள்ள உடும்பிராயி இந்து கல்லூரி, உடுப்பிட்டி மகளீர் வித்தியாலயம், நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம், இனுவில் ஆர்.சி.டி மகா வித்தியாலயம் மற்றும் சாவகச்சேரி இந்து கல்லூரியில் இந்த பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றன.

மஹா கருணா பௌத்த மன்றத்தின் ஶ்ரீ சரனங்கரதேரர், உலக இளைஞர் கிக்சு மன்றத்தின் அநுராத தேரர் , யாழ்ப்பாண பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பிரதான நிர்வாக அதிகாரி பிரிகேடியர்.

அஜித் அல்வத்த, 55 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் ஜயந்த குணரத்ன, 523 ஆவது படைத் தலைமையகத்தின் படைத் தளபதி பிரிகேடியர் டிகிரி திசாநாயக மற்றும் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், பாடசாலை நிர்வாக உத்தியோகத்தர்கள் மற்றும் அப்பிரதேச வாழ் மக்கள் கலந்து கொண்டனர்.

buy footwear | Nike Shoes