Header

Sri Lanka Army

Defender of the Nation

26th January 2018 18:55:57 Hours

மத்திய இராணுவ படையினரால் வன தீயணைப்பு நடவடிக்கைகள்

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 11ஆவது படைப்பிரிவின் 111ஆவது படைப்பிரிவிட்கு உட்பட்ட கண்டி மற்றும் 12ஆவது படைப்பிரிவிற்கு உட்பட்ட மொணராகல பிரதேசத்தின் இரண்டு காடுகளும் தீப் பற்றி கொண்டதையடுத்து 02 மத்திய பாதுகாப்பு படைத் தலைமையங்களுக்கு கீழ் சேவை புரியும் இராணுவ படையிரனால் இவ் வன தீயை அணைப்பதற்கு விரைவாக நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டது.

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ருக்மல் டயஸ் அவர்களின் ஆலோசனைக்கு அமைய மத்திய பாதுகாப்பு படைத் தலைமையங்களுக்கு கீழ் இயங்கும் 11ஆவது படைப் பிரிவு மற்றும் 12ஆவது படைப் பிரிவுகளின் கட்டளை அதிகாரிகளின் மேற் பார்வையின் கீழ் இப் படைப் பிரிவுகளில் 115 க்கு மேற்பட்ட இராணுவ படையினரை வன தீ பற்றிய இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.விரைந்து சென்ற படையினர் தீயை அணைத்தனர்.

பிரதேசத்தில் ஏற்பட்ட தீ விபத்தையடுத்து பொதுமக்களால் இராணுவத்துக்கு கொடுத் தகவலுக்கு அமைய படையினர் மிக விரைவாக தீயை அணைப்பு பணிகளை பொதுமக்களின் உதவியுடன் தீவிரமாக அணைத்தனர்.

இதற்கிடையில்> கண்டியில் மஹகணதரா பிரதேசத்தைச் சேர்ந்த இரசாயன ஆயுதங்கள் வைத்திருந்த தனியார் நிறுவனத்திலும் வன தீ பரவியதையடுத்து விரைந்து சென்ற 11ஆவது இராணுவ படைப் பிரிவின் இராணுவ படையினர்களால் கடந்த 48 மணி நேரத்தில் தீயை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.

Best Sneakers | adidas Yeezy Boost 350