Header

Sri Lanka Army

Defender of the Nation

22nd January 2018 12:08:39 Hours

யாழ் பாதுகாப்பு படையினரால் வட மாகான மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கிவைப்பு

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் சிவில் இராணுவ ஒருங்கிணைப்பின் தலைமையில் யாழ்ப்பாண ,முல்லைத் தீவு மற்றும் பருத்தித்துறை போன்ற வட மாகாணத்தில் உள்ள வறிய குடும்பங்களின் பாடசாலை செல்லும் மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் யாழ் நாகவிகாரை வளாகத்தில் வைத்து கடந்த வெள்ளிக் கிழமை (19) பகிர்ந்தளிக்கப்பட்டது.

அந்த வகையில் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் யாழ் படையினர் மற்றும் கொழும்பிலுள்ள இலங்கை நிப்போன் கல்வி மற்றும் கலாச்சார மையத்தின் அனுசரனையுடன் வட மாகாணத்தில் உள்ள வறிய குடும்பங்களின் பாடசாலை செல்லும் 50 மாணவர்களுக்கான பாடசாலை உபகரண்ங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டது.

அந்த வகையில் இவ் 50 மாணவர்களுக்கான பாடசாலை உபரணங்கள் வழங்கப்பட்டதோடு இம் மாணவர்களின் 9ஆம் தர கற்கைக்கான பண அதவிகளையும் கேப்பக்காறு மாபிய புலமைப் பரிசில் திட்டத்தின் மூலம் வழங்கி வைத்துள்ளனர்.

இவ் அனுசரனைகள் இலங்கை நிப்போன் கல்வி மற்றும் கலாச்சார மையத்தின் செயலாளரான மீகஹாதேன சந்திரசிறி நாயக்க தேரர் அவர்களின் தலைமையில் யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி அவர்களின் பங்களிப்போடு இடம் பெற்றது.

மேலும் இந் நிகழ்வில் இலங்கை நிப்போன் கல்வி மற்றும் கலாச்சார மையத்தின் பிரதி செயலாளரான வெள்ளிமிட்டியே சீவலி நாயக்க தேரர் ,நாக விகாரையின் தலைவரான கொங்கல சிறிதம்ம தேரர் அவர்கள் 51ஆவது படைத் தலைமையக கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் ரொஷான் செனெவிரத்தின ,பாடசாலை அதிபர்கள் மாணவர்கள் போன்றோர் கலந்து கொண்டனர்.

jordan Sneakers | AIR MAX PLUS