20th January 2018 10:40:09 Hours
மாதுறு ஓயாவில் அமைந்துள்ள இராணுவ பயிற்றுவிப்பு கல்லுாரியின் 33 வருடகால பூர்த்திளை முன்னிட்டு மத வழிபாடுகள் மற்றும் சமூக சேவைகள் கடந்த ஞாயிற்றுக் கிழமை (14) மேற்கொள்ளப்பட்டன.
அந்த வகையில் இவ் இராணுவ பயிற்றுவிப்பு கல்லுாரியானது 1985ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 32 கட்டளை அதிகாரிகளினால் நடாத்தப்பட்டதாகும். அந்த வகையில் தற்போது இக் கல்லுhரியின் கட்டளை அதிகாரியான பிரிகேடியர் எச் ஜே செனெவிரத்தின அவர்களின் தலைமையில் இந் நிகழ்வுகள் இடம் பெற்றது.
மேலும் கந்தேகம மஹா சங்கத்தினருக்கான அவர்களுக்கான அன்னதான நிகழ்வூகள் இராணுவ அதிகாரிகள் மற்றும் படையினரின் தலைமையில் இடம் பெற்றதோடு இக் கல்லுhரிக்கான ஆசிகளும் வழங்கப்பட்டது. அந்த வகையில் இந் நிகழ்வூகள் இக் கல்லுhரியின் மைதானத்தில் இடம் பெற்றதோடு இங்கு வருகை தந்ந தளபதியவர்களுக்கான அணிவகுப்பு மரியாதையும் படையினரால் வழங்கப்பட்டது.
அந்த வகையில் இவ் 33 வருடகால பூர்த்தியை முன்னிட்டு கந்தேகம மகா வித்தியாலத்தில் சிரமதானப் பணிகளும் படையினரால் மேற்கொள்ளப்பட்டதுஇ அத்துடன் படையினர் இப் பிரதேச வளாகத்தை சுத்தப்படுத்தியதோடு டெங்கு நோய் வராமல் தடுக்கும் முகமான சுத்திகரிப்பு பணிகளையூம் மேற்கொண்டனர்.
மேலும் படையினர் கிரிக்கெற் போட்டிகளையூம் இக் கல்லுhரியின் ஆண்டுப் பூர்த்தியை முன்னிட்டு மேற்கொண்டனர்.
Running sport media | Air Jordan