17th January 2018 08:56:29 Hours
இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் இராணுவ தளபதி ஜெனரல் கமார் ஜவேட் பஜ்வா அவர்கள் (16) ஆம் திகதி செவ்வாய் கிழமை பகல் சபுகஸ்கந்தையில் உள்ள பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பதவிநிலை கல்லூரிக்கு விஜயத்தை மேற்கொண்டார்.
இந்த கல்லூரிக்கு வருகை தந்த பாகிஸ்தான் இராணுவ தளபதியை பாதுகாப்பு சேவை கல்லூரியின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க அவர்கள் வரவேற்றார்.
பின்பு பாதுகாப்பு சேவை கல்லூரியின் கட்டளை தளபதியினால் பாகிஸ்தான் இராணுவ தளபதிக்கு இந்த கல்லூரியினால் நிகழ்த்தப்படும் கற்கை நெறிகள், பயிற்சிகள் தொடர்பான விளக்கங்கள் ஆற்றப்பட்டன.
அதனை தொடர்ந்து பாதுகாப்பு சேவை கல்லூரியின் கட்டளை தளபதியினால் பாகிஸ்தான் இராணுவ தளபதிக்கு நினைவு சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இறுதியாக பிரமுகர்களின் வருகையையிட்டு கையொப்பமிடும் புத்தகத்தில் பாகிஸ்தான் இராணுவ தளபதி கையொப்பமிட்டார்.
Nike Sneakers Store | Men’s shoes