Header

Sri Lanka Army

Defender of the Nation

11th January 2018 11:30:43 Hours

பாகிஸ்தான உயரதிகாரி இலங்கை இராணுவ பதவி நிலை பிரதானியை சந்திப்பு

பாகிஸ்தான் ஸ்கூல் ஆப் லாஜிஸ்டிக்ஸ் கட்டளை அதிகாரியான பிரிகேடியர் காஷிப் சபார் உட்பட பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகள் இலங்கை இராணுவ தளபதியை பிரதிநிதித்துவ படுத்தி இராணுவ பதவி நிலை பிரதானியான மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர அவர்களை (08) ஆம் திகதி இராணுவ தலைமையகத்தில் அவரது பணிமனையில் உத்தியோகபூர்வமாக சந்தித்தனர்.

இச் சந்திப்பின் போது வருகை தந்த பாகிஸ்தான் அதிகாரிகளை மனப்பூர்வமாக வரவேற்று அன்னிய ஒன்னிய தொடர்பான கருத்துக்கள் பரிமாறப்பட்டது.

இவர்களது இந்த வருகையின் நிமித்தம் இராணுவ தளபதி அவரது வாழ்த்துக்களை தெரிவித்ததாக தெரிவிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து இந்த அதிகாரிகள் இருவருக்கும் இடையில் நினைவு சின்னங்கள் பரிமாரப்பட்டது.

மேலும் இந்த அதிகாரிகள் திருகோணமலையில் அமைந்துள்ள இராணுவ ஸ்கூல் ஆப் லாஜிஸ்டிக்ஸ் பயிற்சி கல்லூரியின் கட்டளை தளபதியான பிரிகேடியர் தீபால் வன்னியாரச்சியை சந்திப்பதற்கு உள்ளனர்.

இராணுவ தலைமையக சந்திப்பின்போது இலங்கைக்கான பாகிஸ்தான தூதரக அலுவலகத்தின் பாதுகாப்பு ஆலோசகர், இராணுவ பயிற்சி பணிப்பாளர் மேஜர்ஜெனரல் ரவிபிரிய மற்றும் பாகிஸ்தான தூதரகத்தின் இணைப்பதிகாரிகள் இணைந்திருந்தனர்.

Asics footwear | Nike