Header

Sri Lanka Army

Defender of the Nation

09th January 2018 08:44:40 Hours

புதிய ஆயுர்வேத வைத்தியர்களுக்கான இராணுவ பயிற்சி

தலைமைத்துவம் மற்றும் நடைமுறை பயிற்சியின் ஊடாக தலைமைத்துவ திறமை மற்றும் ‘நற்சிந்தனை’ எனும் தொனிப்பொருளின் கீழ் ஆயுர்வேத திணைக்களத்தின் புதிய ஆயுர்வேத வைத்தியர்கள் 640 பேருக்கு ‘தலைமைத்துவம் அபிவிருத்தி தொடர்பான ஆறு நாட்கள் பயிற்சி நிகழ்ச்சி திட்டம் இராணுவ பயிற்சி பாடசாலைகளில் (8) ஆம் திகதி தொடக்கம் ஆரம்பமாகியுள்ளது.

இனத்தை கட்டியெழுப்பும் செயற் பொறுப்புடன் இராணுவ தளபதியின் எண்ணக் கருவிற்கமைய இராணுவ பயிற்சி நிலையங்களான தியதலாவ, கலத்தேவ, மின்னேரிய, எம்பிலிபிடிய மற்றும் பூவெலிகட முகாம்களில் இடம்பெற்றன.

ஆறு நாட்கள் இடம்பெறும் இந்த நிகழ்ச்சி திட்டத்தில் தலைமைத்துவம், குண தர்மங்கள், பயிற்சியின் மூலம் முன்னேற்றம், வாழ்க்கையில் சவால்களை வெற்றியிடுவது தொடர்பாகவும், தவறான சமூக எதிர்பார்ப்புகள் மற்றும் அடிப்படை தேவைகள் தொடர்பான கருத்துகள் அறிவூட்டப்பட்டது.

சுகதார, போசனம் மற்றும் உள்நாட்டு வைத்திய அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சின் மூலம் வடுத்த வேண்டுகோளுக்கமைய இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் இந்த பயிற்சி நெறி தொடர்பாக இராணுவ பயிற்சி பணிப்பாளர் அவர்களுக்கு பணிப்புரை விடுத்தார். இதன் பிரகாரம் இராணுவ பயிற்சி முகங்களான தியதலாவ தொண்டர் பயிற்சி பாடசாலை, மின்னேரிய காலாட் படை நிலையம், அம்பாறை, தியதலாவை துப்பாக்கி சூட்டு பயிற்சி நிலையம், கலாஓயா, கலத்தேவ, பனாகொட, மின்னேரிய, அம்பிலிபிடிய பயிற்சி, பூவெலிகட, அம்பேபுஸ்ஸ தொம்பகொட , குட்டிகல, புத்தளம், தெகிஅத்தகண்டிய மற்றும் ரண்டெம்ப பயிற்சி பாடசாலைகளில் இடம்பெற்றன.

இராணுவத்தின் 1/3 % சார்பாக இனத்தை கட்டியெழுப்புவதற்கு பாடுபடுவோம் என்ற இராணுவ தளபதியின் எண்ணக் கருவிற்கு அமைய இந்த பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12 ஆம் திகதி வரை இந்த பயிற்சி நெறிகள் இடம்பெறும்.

இந்த பயிற்சிநெறி ஆரம்ப நிகழ்விற்கு இராணுவ உயரதிகாரிகள் மற்றும் ஆயுர்வேத திணைக்களத்தின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதற்கு முன்பு சமுர்த்தி அதிகாரிகளுக்கு இராணுவத்தினரால் இந்த பயிற்சி நெறிகள் வழங்கப்பட்டன.

trace affiliate link | Jordan Ανδρικά • Summer SALE έως -50%