Header

Sri Lanka Army

Defender of the Nation

07th January 2018 16:46:37 Hours

22 ஆவது படைப் பிரிவினால் டெங்கு ஒழிப்பு பணிகள்

கிழக்கு பாதுகாப்பு படை தலைமையகத்தின் கீழ் 22 ஆவது படைப்பிரிவின் ஏற்பாட்டில் திருகோணமலையில் உள்ள ஆண்டாங்குளம், சீனக்குடா மற்றும் பாலையூற்று பிதேசங்களில் இரண்டு நாட்கள் டெங்கு ஒழிப்பு திட்டம் இராணுவத்தினர் மற்றும் வைத்திய அதிகாரிகளின் பங்கேற்புடன் 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 -29 ஆம் திகதி வரை இடம்பெற்றது.

திருகோணமலை உப்புவெளி பிரதேசத்தை சேர்ந்த டொக்டர் டி இந்திரமதி அவர்களினால் 22 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் அநுர ஜயசேகரவிற்கு விடுத்த வேண்டுகோளுக்கு அமைய இராணுவத்தினர் இந்த டெங்கு ஒழிப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

இந்த டெங்கு ஒழிப்பு பணிகளில் போது 450 வீடுகள் இராணுவத்தினரால் பரிசீலனை செய்யப்பட்டது.

short url link | Men’s shoes