Header

Sri Lanka Army

Defender of the Nation

03rd January 2018 16:46:10 Hours

யாழ்ப்பாண பாடசாலை மாணவர்களுக்கான கல்வி ஊக்குவிப்பு நிகழ்வு

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் ‘பவுன்டேஷன் ஒப் குட்னஸ்’ அமைப்பின் குசில் குணசேகர அவர்களின் அனுசரனையில் பாடசாலை மாணவர்களுக்கு சிருடைகள் மற்றும் பாடசாலை உபகரணங்கள் (4) ஆம் திகதி நன்கொடையாக வழங்கப்பட்டன.

யாழ்ப்பாண முத்துதம்பி மஹா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வுகள் யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்களின் ஆலோசனைக்கமைய இடம்பெற்றது.

இத்திட்டத்தின் கீழ் யாழ்ப்பாண முத்துத்தம்பி மகா வித்தியாலயத்தின்490 மாணவர்களுக்கும், கோண்டாவிலுள்ள பரமஜோதி வித்யாலயாத்தின்234 மாணவர்களுக்கும் இந்த நன்கொடைகள் வழங்கப்பட்டன.

நல்லெண்ணத்தின் அறக்கட்டளை முகாமையாளர் திரு ஆனந்த ஜெயவர்த்தன, யாழ் கல்வி வலய பணிப்பாளர் என். தேவராஜா, 51 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரொஷான் செனெவிரத்ன, அதிபர்கள், ஆசிரியர்கள்,பெற்றோர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Running sports | Nike SB