Header

Sri Lanka Army

Defender of the Nation

03rd January 2018 19:44:15 Hours

துனுக்காய் பிரதேசத்தில் நடாத்திய நத்தால் கெரோல் நிகழ்வு

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 65 மற்றும் 651 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் இரணமத கிறிஸ்தவ தேவாலயத்தில் கெரோல் பக்தி கீத நிகழ்வுகள் (29) ஆம் திகதி வௌளிக் கிழமை கத்தோலிக்க பக்தர்கள் ஆயிரத்திற்கு மேலானோரது பங்களிப்புடன் மிக சிறப்பாக இடம்பெற்றது.

இந்த நிகழ்வுகள் இந்த தேவாலயத்தின் அருள்பணி அருள் செல்வம் அவர்களது தலைமையில் இடம்பெற்றது. இதற்கான அனைத்து வசதிகளும் 651 ஆவது படைத் தலைமையக படையினர்கள் மற்றும் 11 ஆவது விஜயபாகு காலாட் படையினரது முழுமையான ஒத்துழைப்புடன் இடம்பெற்றது.

இந்த கிறிஸ்தவ கெரொல் நிகழ்வில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் பாடல்கள் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் 651 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி பிரிகேடியர் ரஞ்சித் அபேசிங்க , மதகுருமார்கள், முலங்காவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ருக்மள் இரத்னாயக,இராணுவ அதிகாரிகள் மற்றும் கிறிஸ்தவ பக்தர்கள் இணைந்திருந்தனர்.

Sneakers Store | Nike