03rd January 2018 16:47:42 Hours
மன்னார் மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்ட புதிய ஆயரான வணக்கத்திற்குரிய பிதா எமானுல் பெர்ணாந்து அவர்களை வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 54 ஆவது படைப் பிரிவினால் கடந்த டிசம்பர் மாதம் (30) ஆம் திகதி மன்னார் ஆயர் விடுதியில் வைத்து வரவேற்கப்பட்டார்.
இந்த நிகழ்விற்கு கொழும்பு மாவட்ட ஆயரான காதினல் மெல்கம் ரஞ்சித் பீரிஸ் அவர்கள், வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா, முப்படை உயரதிகாரிகள் மற்றும் பொலிஸ் உயரதிகாரிகள் இணைந்திருந்தனர்.
மன்னார் மாவட்ட அருள்பணி விக்டர் சூசை மற்றும் 54 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் அதுல கலகமகே அவர்களது ஏற்பாட்டில் இந்த நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டன.
Best Sneakers | Nike