Header

Sri Lanka Army

Defender of the Nation

28th December 2017 19:51:44 Hours

திருக்கோணமலையில் 22ஆவது படையணியினர் கொண்டாடிய நத்தார் பண்டிகை

கிழக்கு பாதுகாப்பு படைத்தலைமையகத்தின் கீழ் இயங்கும் 22 ஆவது படைத் தலைமையகத்தினரின் ஒழுங்கமைப்பில் மிகவும் சிறப்பாக நத்தார் கரோல் கச்சேரியானதுசனிக்கிழமை (24)ஆம் திகதி திருக்கோணமலை மரியம் தேவாலயத்தில் இடம் பெற்றது.

இந் நிகழ்வானது 22 ஆவது படைப்பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர அவர்களின் ஆலோசனைக்கு அமைய 221 படைப்பிரிவின் படை அதிகாரி பிரிகேடியர் சுமித் பிரேமரால் அவர்களின் மேற்பார்வையின் கீழ் இடம் பெற்றது.

இந் நிகழ்வில் பிரதான விருந்தினராக திருக்கோணமலை மத போதகரான அருட்தந்தை நொயல் எம்மானுவேல் அவர்களும் 22 ஆவது படைப்பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் அருணஜயசேகர அவர்களும் கலந்து கொண்டார்கள்.

இந் நிகழ்வுகிறிஸ்துமஸ் மர அலங்காரங்களுடன் அலங்கரிக்கப்பட்டதோடு வண்ணமயமான ஆடைகளில் பள்ளி குழந்தைகள் நத்தார் கீதம் மற்றும் பல நடனங்களையும் முன் வைத்தனர்.தொடர்ந்து வானவேடிக்கைகளும் காட்ச்சியளித்தனர்.

இந் நிகழ்வில் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள்> படையினர்> சிவில் ஊழியர்களும் சிறுவர்களும் கலந்து கொண்டார்கள்.

Sports brands | Shop: Nike