Header

Sri Lanka Army

Defender of the Nation

31st December 2017 15:08:04 Hours

படையணிகளுக்கு இடையிலான கைப்பந்து போட்டியில் விஜயபாகு காலாட் படையணிக்கு வெற்றி

இலங்கை இராணுவத்தில் 12 படையணிகள் மற்றும் இராணுவ மகளீர் படையணியின் 4 பிரிவில் விளையாட்டு வீர, வீராங்களைகள் இப்போட்டியில் கலந்து கொண்டனர்.

இப்போட்டிகள் கடந்த (27) ஆம் திகதி புதன்கிழமை பனாகொட இராணுவ உள்ளரங்க மைதானத்தில் இடம்பெற்றது.

இப்போட்டிகளில் இறுதி சுற்றுப் போட்டி இராணுவ சிங்க படையணி மற்றும் விஜயபாகு காலாட் படையணிக்கு இடையில் இடம்பெற்றது.

இப்போட்டியில் விஜயபாகு காலாட் படையணி வெற்றியை பெற்று கொண்டது.

அதனைப் போல் இராணுவ மகளீர் பிரிவினர்களுக்கு இடையில் இடம்பெற்ற இறுதி சுற்றுப் போட்டியில் 1 ஆவது இராணுவ மகளீர் படையணி வெற்றியை தட்டிச் சென்றது.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராணுவ பிரதி பதவிநிலை பிரதானி மேஜர் ஜெனரல் தம்பத் பெர்ணாந்து வருகை தந்துவெற்றியாளர்களுக்கு பரிசினையும் வழங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் விஜயபாகு காலாட் படையணிமற்றும் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதிமேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன, இராணுவ கைப்பந்து சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் விமல் விதானகே, சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் விளையாட்டு வீர வீராங்கனைகள் இணைந்திருந்தனர்.

buy footwear | Sneakers Nike