Header

Sri Lanka Army

Defender of the Nation

22nd December 2017 16:25:29 Hours

59ஆவது படைப் பிரிவின் ஆரம்ப ஆண்டு நிகழ்வுகள்

முல்லைதீவுப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும 59ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் என் டீ வன்னியாராச்சியவர்களின் வழிகாட்டலின் கீழ் 59ஆவது படைப் பிரிவின் 10ஆவது ஆரம்ப ஆண்டு பூர்தியை முன்னிட்டு பலவாறான சமய வழிபாட்டு நிகழ்வுகள் போன்றன கடந்த புதன் கிழமை (130 இப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் இடம் பெற்றது.

அந்த வகையில் (டிசெம்பர் 13) இடம் பெற்ற இப் படைப் பிரிவு ஆரம்ப ஆண்டு நிகழ்வில் வருகை தந்த 59ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் என் டீ வன்னியாராச்சியவர்களுக்கு 24ஆவது சிங்கப் படையணியினரால் (SLSR)இராணுவ அணிவகுப்பு மரியாதையும் இடம் பெற்றது.

மேலும் பௌத்த மத அனுஷ்டானங்களுக்கு அமைவாக மதப் பிரார்த்தனைகள் இப் படைத் தலைமையகத்தில் உள்ள விகாரையில் இடம் பெற்றது. அத்துடன் முல்லிவாய்க்கால் யூம்மா பள்ளிவாசலில் மற்றும் வட்டப்பளை கண்ணகி அம்மன் கோவிலிலும் அத்துடன் முல்லைத்தீவு புனித யுட் ஆலயத்திலும் வழிபாடுகள் இடம் பெற்றன.

அத்துடன் கிளிநொச்சியிலுள்ள மஹா தேவ ஆச்சிரமத்தின் 350பிள்ளைகளுக்கான மதிய உணவும் வழங்கப்பட்டது.

மேலும் கிரிக்கெட் போட்டிகளும் இந் நிகழ்வையொட்டி இடம் பெற்றது.

இந் நிகழ்வில் பல உயர் அதிகாரிகளும் படையினரும் கலந்து கொண்டனர்.

மேலும் அனைத்து தர அதிகாரிகளுக்குமான மதிய விருந்துபசாரமும் நிகழ்த்தப்பட்டது.

Mysneakers | Beyonce Ivy Park x adidas Sleek Super 72 ICY PARK White , Where To Buy , GX2769 , Ietp